மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா.. என்ன நடந்தது நேற்று..? ஏபிபியின் தலைப்பு செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்தால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை: முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை
- மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க காலக்கெடு தேவை; பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம் - தமிழ்நாடு போல தனி தீர்மானம் இயற்ற வேண்டுகோள்
- 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி; சென்னையில் இருந்து கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்
- “உயிர் இருக்கும் வரை தமிழ்நாடு மக்களுக்காக, தமிழுக்காக போராடுவேன்” - ஆளுநருக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
- வருவாய்த் துறை அதிகாரிகள் பதவி உயர்வில், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதால், 200-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
- 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் 3 கேள்விகளுக்கு முறையான தலைப்புகள் வழங்கப்படவில்லை என்பதால் அவற்றுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
- சென்னையில் போலீஸ் அனுமதியின்றி ஜிம் திறக்க வழிவகை செய்யும் வகையில் திருத்தம் செய்த மசோதாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
- தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா சட்டப்பேரவை என்னும் அம்சம் ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில், நேற்று முதல் டிஜிட்டல் ஹவுஸ் என்னும் புதிய திட்டம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா:
- கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ இரயில் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கொரோனா அதிகரிப்பு எதிரொலி: கோவிஷீல்டு உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு
- கர்நாடகா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் திடீர் திருப்பமாக ஷிவமோக்கா மாவட்டத்தில் பாஜவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் இணையதளத்தில் தமிழ் வாக்கியங்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டது குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்
- இந்தியாவில் புதிதாக 7,830 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4:35 மணி அளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
- ’பிரதமர் மோடியை எவ்வளவு மோசமாக விமர்சிக்கிறார்களோ அந்த அளவுக்கு பாஜக வளரும்’ - அமித்ஷா பேச்சு
உலகம்:
- ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் விற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதை ஜப்பான், பிரான்ஸ் அரசுகளுடன் சேர்ந்து நிர்மலா சீதாராமன் இன்று அமெரிக்காவில் அறிவிக்கிறார்.
- ரஷ்யாவுக்கு எதிரான போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
- நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 4 இந்தியர்கள் உயிரிழப்பு
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை படைத்தார் எம்.எஸ்.தோனி.
- ஆசிய ஹாக்கி போட்டி சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
- ஐபிஎல் தொடரின் இன்றைய 18வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத இருக்கின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion