TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்னென்ன..? வாங்க பார்க்கலாம்..!
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே முக்கியச்செய்திகளாக காணலாம்.
![TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்னென்ன..? வாங்க பார்க்கலாம்..! TN Headlines Future Prime Minister EPS Thambidurai byte Amit Shah angry with Modi Chief Minister Stalin TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்னென்ன..? வாங்க பார்க்கலாம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/fa8d1eb67c7cde595dc4dd99fbbc5f801686564516251333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி எப்போது வழங்கப்படும்? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்..!
கொரோனா தொற்று பரவலால் மடிக்கணினி கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் உலகளவில் மடிக்கணினி தயாரிப்புக்கு தேவையான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் அதன் விலை வெகுவாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "நிதி நிலைமை, லேப்டாப் தயாரிக்க மூலப்பொருள்கள் உள்ளிட்டவற்றை பொறுத்து இந்த கல்வி ஆண்டில் லேப்டாப் வழங்கப்படும். டேப் வழங்கலாமா எது உபயோகிக்க ஏற்றதாக இருக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது" என்றார்.
மேலும் படிக்க,
எம்.பி.பிஎஸ் பொதுக் கலந்தாய்வை எதிர்க்கிறோம்; எப்படியாவது தடுத்து நிறுத்துவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”மருத்துவத்தில் பொதுக் கலந்தாய்வை முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். கடந்த மாதம் பொதுக் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பால், 7.5 % இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். வட மாநில, வடகிழக்கு மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க நேரிடும். தமிழ்நாட்டு மாணவர்கள் இங்கே படிக்க வாய்ப்பில்லாமல் போகும். தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக் குறியாகும். இது ஜனநாயக விதிகளை மீறியதாக அமையும்.மருத்துவத்தில் பொதுக் கலந்தாய்வை முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். எப்படியேனும் அந்தக் கலந்தாய்வைத் தடுத்து நிறுத்துவோம்” என்றார்.
மேலும் படிக்க,
"மோடி மீது அமித்ஷாவுக்கு கோபம்; அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியே... ஆனால்.." - ட்விஸ்ட் வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழர் ஒருவரை பிரதமராக்குவோம் என கூறியிருக்கிறாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித் ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதன் உள்நோக்கம் புரியவில்லை. அதேபோல, மோடி மீது என்ன கோபம் என தெரியவில்லை” என்றார்.
மேலும் படிக்க,
”வருங்கால பிரதமர் எடப்பாடி பழனிசாமி.. அத்தனை தகுதியும் உண்டு” - அதிமுக எம்.பி., தம்பிதுரை பேட்டி!
செய்தியாளர்கள் நேற்று வேலூரில் அமித்ஷா, தமிழர்களை பிரதமராக்குவோம் என்று சொன்னாரே? அதற்கு உங்களின் கருத்துகள் என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிமுக எம்.பி.தம்பிதுரை, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிபெறும். அமித்ஷா தமிழரை பிரதமராக்குவோம் என்று சொன்னதை வரவேற்கிறோம். அது எந்த தேர்தலில் நடக்கும் என்று தெரியாது. ஆனால், அப்படி நடந்தால் அதற்கு தகுதியானவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான்” என்றார்.
மேலும் படிக்க,
”வருங்கால பிரதமர் எடப்பாடி பழனிசாமி.. அத்தனை தகுதியும் உண்டு” - அதிமுக எம்.பி., தம்பிதுரை பேட்டி!
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?
கடந்த மே மாதம் 28ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில், 15 நாட்களுக்குள்ளாகத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வர்கள் https://www.upsc.gov.in/CSP_2023_WRWN_En_120623.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம். தேர்வு முடிவுகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அல்லது விளக்கம் தேவைப்படும் சூழலில், தேர்வர்கள் டெல்லி, ஷாஜகான் சாலையில் உள்ள சேவை மையத்தை அணுகலாம்.
மேலும் படிக்க,
UPSC Prelims Result 2023: யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)