Tirumala Tirupati: கோடை விடுமுறை... 3 கி.மீ தூரம்; 36 மணி நேர காத்திருப்பு - தவமிருந்து திருப்பதியில் தரிசனம்!
Tirumala Tirupati : கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Tirumala Tirupati : கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி கோயில்
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம், ஆந்திரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், கோடை கால விடுமுறையை கழிக்க பெரும்பாலனவர்கள் சுற்றுலா செல்கின்றனர். அதில் மிக முக்கியமான கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
இந்நிலையில், நேற்று திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பின. இன்று காலை வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து கெங்கையம்மன் கோயில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், நேரம் ஒதுக்கிடு முறையில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விஐபி தரிசனம் ரத்து
இதனால் திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது. கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் சாதாரண மக்கள் தரிசனம் செய்ய சீரமமாக உள்ளது. இதனை எளிமையாக்க ஏதுவாக, விஐபி தரிசனத்தை 3 நாட்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. நேற்று ஒரே நாளில் 79,207 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக மூன்று கோடியை 19 லட்சம் ரூபாயை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
TN 10th Result 2023: இன்று வெளியாகிறது 10, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்... எங்கே? எப்படி பார்ப்பது..?