TN 10th Result 2023 LIVE: தேர்வில் தேர்ச்சி இல்லையா..? கவலை வேண்டாம்..! மே 23ம் தேதி முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!
Tamil Nadu 10th Result 2023 LIVE Updates: தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
LIVE
Background
Tamil Nadu 10th Result 2023 LIVE
தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளங்கள், குறுஞ்செய்தி, பள்ளிகள், ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் என 5 வழிகளில் தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு மே 19ஆம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் 3,260 தேர்வு மையங்களில் எழுதினர்.
தேர்வு நடந்தது எப்போது?
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. மார்ச் 16ஆம் தேதி ஆங்கிலப் பாடம், மார்ச் 20ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
மார்ச் 24ஆம் தேதி அன்று உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கும் மார்ச் 28ஆம் தேதி அன்று வேதியியல், கணக்குப் பதிவியல், மார்ச் 30ஆம் தேதி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. கடைசியாக ஏப்ரல் 05ஆம் தேதி அன்று கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது.
மேலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றன. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 10 ஆங்கிலம், ஏப்ரல் 13- கணிதம், ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள் மற்றும் ஏப்ரல் 17- அறிவியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து இவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மே 19ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள்
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, மே 19ஆம் தேதி (இன்று) மதியம் 2 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோன்று, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
5 வழிகளில் தேர்வு முடிவுகள்
மாணவர்கள், www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இதற்குத் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர்கள் உள்ளிட வேண்டியது அவசியமாகும்.
மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பிற வழிகள்
மேலும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களில் (National Informatics Centres) தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
இவை அனைத்தையும் தவிர்த்து, அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், 10 மற்றும் 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
TN 10th Result 2023 LIVE: தூத்துக்குடி மாவட்டத்தில் 21,029 பேர் தேர்ச்சி..!
தூத்துக்குடி மாவட்டத்தில் 22,001 மாணவ, மாணவியர் எழுதினர். இந்நிலையில், தோ்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 21,029 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 10033 பேர் (93.31%), மாணவியர் 10,996 பேர் (97.75%) தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.58 சதவீதம் ஆகும். மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம், 5வது இடம் பிடித்துள்ளது.
TN 10th Result 2023 LIVE: புதுச்சேரி:- கடந்த ஆண்டை விட 3.8% தேர்ச்சி குறைவு.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 89.12% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை விட 3.8% தேர்ச்சி குறைவு.
TN 10th Result 2023 LIVE: அரசு பள்ளிகள் 87.45% தேர்ச்சி..!
தமிழ்நாட்டில் 10 ம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகள் 87.45 % தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
TN 10th Result 2023 LIVE: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 79.60% தேர்ச்சி..!
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற 79.60 சதவீதம் பேர் தேர்ச்சி
TN 10th Result 2023 LIVE: திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு சதவிகிதம் தேர்ச்சி குறைவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி தமிழ்நாட்டை திருவண்ணாமலை மாவட்டம் 30 வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 7-வது இடத்திலிருந்து தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 30 ஆவது இடத்தில் தள்ளப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 88.95 % திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, 32436 ,மாணவர்கள் 16637, மாணவிகள் 15799, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் 28852 ,மாணவர்கள் 14097
மாணவிகள் 14755 திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் மாணவர்கள் 84.73% மாணவிகள் 93.39%