மேலும் அறிய

Tirumala Tirupati: திருப்பதிக்கு படையெடுக்கும் பக்தர்கள்...4 கி.மீ தூரம்; 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்...!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tirumala Tirupati:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருந்து  சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

திருப்பதி கோயில்

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம், ஆந்திரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

அதிகரிக்கும் கூட்டம்

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. வார இறுதி நாட்களை போலவே வார நாட்களிலும் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.  நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து  அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய கடும் அவதி அடைந்து வருகின்றனர்.  இதனால் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது. 

காரணம் 

தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், கோடை கால விடுமுறையை கழிக்க பெரும்பாலனவர்கள் சுற்றுலா செல்கின்றனர். அதில் மிக முக்கியமான கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதுவும் கோடை விடுமுறை முடிவடைய உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

இதனிடையே திருப்பதியில் நேற்று 74,583 பேர் தரிசனம் செய்ததாக திருப்பதி தேவஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், 3.57 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 40,343 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

Crime: ஆன்லைனில் ரூ. 23 இலட்சத்தை இழந்த இளைஞர்; குற்றவாளிகளின் ரூ.2 கோடியை முடக்கிய காவல் துறை!

Karnataka Cabinet Expansion: கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்... 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு... யார் யார் தெரியுமா...?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Embed widget