Watch Video: டிக்கெட் இருந்தும் அபராதம் கேட்ட டிடிஆர்.. பொளந்து கட்டிய பயணி.. ரயிலில் பரபரப்பு!
மும்பையில் உள்ளூர் ரயிலில் அபராதம் கேட்ட காரணத்தால் பயண டிக்கெட் பரிசோதகரை (TTE) பயணி ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் ரயிலில் அபராதம் கேட்ட காரணத்தால் பயண டிக்கெட் பரிசோதகரை (TTE) பயணி ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். தாக்கிய பயணியிடம் ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் இருந்துள்ளது. ஆனால், அவர் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
மும்பை ரயிலில் பரபரப்பு சம்பவம்: அனிகேத் போசலே என்ற பயணி, சர்ச்கேட்டில் இருந்து விரார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, தலைமை டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பீர் சிங், பயணியிடம் ஏசி கோச்சில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாததைக் கண்டறிந்துள்ளார். எனவே, அபராதம் கட்டச் சொன்னார்.
இதற்கிடையே, அபராதம் குறித்து அனிகேத் போசலே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது, அடிதடியில் முடிந்துள்ளது. ஜஸ்பீர் சிங்கும் மற்ற பயணிகளும் டிக்கெட் பரிசோதகரை தாக்கியுள்ளனர். மேலும், டிக்கெட் பரிசோதகரின் சட்டையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை, யாரோ வீடியோ எடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் டிக்கெட் பரிசோதகர் காயமடைந்தது மட்டும் இன்றி, மற்ற பயணிகளிடம் இருந்து அபராதமாக வசூலித்த 1,500 ரூபாயையும் பறி கொடுத்துள்ளார்.
தர்ம அடி வாங்கிய டிடிஆர்: இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சண்டையால் போரிவலி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து இறங்கும்படி போசலே அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இறுதியாக, இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்களால் நளசோபரா நிலையத்தில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
In Mumbai, Three passengers assaulted a TTE on a local train after being fined for traveling without a valid ticket.#Shameless #Mumbai pic.twitter.com/VQUy6gTDbC
— Raajeev Chopra (@Raajeev_Chopra) August 17, 2024
போன்சலே பின்னர் தனது தவறை ஒப்புக்கொண்டார். எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அவருக்கு எதிரான எஃப்ஐஆர் தனது வேலையை பாதிக்கும் என்றும் கூறினார். சண்டையின்போது பறி கொடுத்த 1,500 ரூபாயை டிக்கெட் பரிசோதகரிடம் கொடுத்துவிட்டார்" என்றார்.