ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர்கள் அதிரடி..!
தெற்கு காஷ்மீரில் பொதுமக்கள் கொலைகளுக்கு காரணமான ஹிஸ்புல்-முஜாஹிதீனின் ஹிட் படையைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாதிகளிடம், ஒரு ஏகே ரைபிள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திப்போரா அருகே நாக்பேரன் வனப்பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் மூன்று பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
அவந்திபோராவின் நாக்பேரன் ட்ராலின் வனப்பகுதியின் மேல் பகுதியில் என்கவுன்ட்டர் தொடங்கியதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இணைந்த அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் ராணுவம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Three unidentified terrorists affiliated with proscribed terror outfit JeM killed. Search operation underway, further details awaited: Jammu a& Kashmir Police
— ANI (@ANI) August 21, 2021
ஜம்மு-காஷ்மீர், அவந்திபோராவின் பாம்போர் பகுதியில் நேற்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுன்டரின் போது இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். மறுநாள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
An encounter has started in the upper reaches of the forest area of Nagbaeran Tral, Awantipora. Police and Army are undertaking the operation. Details awaited: Jammu & Kashmir Police
— ANI (@ANI) August 21, 2021
இதுகுறித்து ஐஜிபி காஷ்மீர் விஜய் குமார், "கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர், கடந்த ஜூலை 23ஆம் தேதி பஸ்துனாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பியூனைக் கொன்றதில் தொடர்புடையவர். அவர் க்ரூவின் முஸைப் முஷ்டாக் என அடையாளம் காணப்பட்டார். கொல்லப்பட்ட இரண்டாவது பயங்கரவாதி முசாமில் அகமது ராதர் ஆவார். இவர் புல்வாமாவின் சக்கூராவில் வசிப்பவர்.
ஜே.கே. டிஜிபி தில்பக் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "க்ரூவில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர். இவர்கள், தெற்கு காஷ்மீரில் பொதுமக்கள் கொலைகளுக்கு காரணமான ஹிஸ்புல்-முஜாஹிதீனின் ஹிட் படையைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாதிகளிடம், ஒரு ஏகே ரைபிள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது” என்று கூறினார்.
இந்த வார தொடக்கத்தில், பயங்கரவாதிகள், குல்காமில் அப்னி கட்சித் தலைவர் குலாம் ஹசனை சுட்டுக் கொன்றனர். குலாம் ஹசன் பிடிபி கட்சியில் இருந்து விலகி நான்கு மாதங்களுக்கு முன்பு இந்தக் கட்சியில் சேர்ந்தார். இதற்கு முன், ஆகஸ்ட் 17ஆம் தேதி குல்காமின் பிரஜ்லு ஜாகிர் பகுதியில் பாஜக தலைவர் ஜாவித் அகமது தார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி, குல்காமில் பாஜகவின் கிசான் மாவட்ட பிரிவின் தலைவர் குலாம் ரசூல் தாரை பயங்கரவாதிகள் கொன்றனர்.