Viral Video : இந்த வீடியோவைப் பாத்தாவது ரோட்டுல ஸ்டண்ட் பண்ணாதீங்க.. உயிர்தான் முக்கியம்.. பதறவைக்கும் வீடியோ..
பரபரப்பான தெருவில் ஒருவர் பைக்கை வேகமாக ஓட்டிச் செல்வதை அந்த வீடியோ காட்டுகிறது.
தில்லி காவல்துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பயங்கரமான சாலை விபத்து வீடியோவை அண்மையில் வெளியிட்டது. பரபரப்பான தெருவில் ஒருவர் பைக்கை வேகமாக ஓட்டிச் செல்வதை வீடியோ காட்டுகிறது. அவர் சில ஆபத்தான ஸ்டண்ட்களை செய்வதுடன் தனது வேகத்தை மேலும் அதிகரிக்கச் செல்கிறார். அடுத்து நடந்தவை அத்தனையும் பதபதைக்க வைக்கிறது. அவர் வண்டியின் வேகத்தை சமாளிக்க முடியாமல் சமநிலையை இழக்கிறார். அதனால் வாகனத்தின் கட்டுப்பாட்டை மீட்க முடியாமல் தடுமாறி கீழே விழுகிறார்.
Road par nahi chalegi TUMHARI MARZI,
— Delhi Traffic Police (@dtptraffic) August 3, 2022
Aise stunts karoge toh jodne ke liye bhi nahi milega KOI DARZI!#SpeedKills #RoadSafety pic.twitter.com/RFF7MR26Ao
அடுத்து, அந்த மனிதன் இறந்துவிட்டதாகக் குறிப்பிடும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தைக் காண்கிறோம். புகைப்படத்தில் அந்த நபரின் புகைப்படம் இல்லை, அதற்கு பதிலாக, "பைக் ஸ்டண்ட்ஸ் கர்தா தா (அவர் பைக் ஸ்டண்ட் செய்தார்" என்று எழுதப்பட்டிருந்தது.
இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவைக் காண வேண்டாம்.
நாட்டில் சாலை விபத்துக்கள் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி 2020 வரை நான்கு ஆண்டுகளில் 5.82 லட்சம் பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர், இருப்பினும் இறப்புகளின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக குறைந்துள்ளது என்று ஜூலை மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2017ம் ஆண்டில், 464,910 விபத்துக்களால் 147,913 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 470,975 பேர் காயமடைந்துள்ளனர், 2018ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 467,044 ஆக இருந்தது, 151,417 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 469,418 பேர் காயமடைந்துள்ளனர், 2019ல் விபத்துக்கள் பட்டியலை ஆய்வு செய்யும்போது அவை 24,813 ஆகக் குறைந்துள்ளது. அடுத்து 131,714 பேர் உயிரிழந்தனர் மற்றும் 348,279 பேர் காயமடைந்தனர் என்று சாலை போக்குவரத்து நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
கல்வி, பொறியியல், அமலாக்கம் மற்றும் அவசரகால பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சாலை பாதுகாப்பு பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சகம் பல முனை உத்தியை வகுத்துள்ளது என்றும் அவர் கூறினார். அதன்படி, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சாலைப் பாதுகாப்பு குறித்த பயனுள்ள பொது விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூக ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்த பல்வேறு விளம்பர நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை அமைச்சகம் மேற்கொள்கிறது என்று நிதின் கட்கரி கூறினார். மேலும், சாலை பாதுகாப்பு ஆலோசனையை நிர்வகிப்பதற்கான பல்வேறு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது என அவர் மக்களவையில் அண்மையில் பதில் அளித்திருந்தார்.