ஊர் முழுக்க கன்டெண்ட் கிரியேட்டர்ஸ் ! யூடியூபர்களாக மாறிய ஒட்டுமொத்த கிராமம்!
கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்டவர்களிடன் சொந்தமாக யூடியூப் சேனல்கள் உள்ளது.
யூடியூபர்ஸ் கிராமம் :
கொரோனா காலக்கட்டம் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும் , பலரை தொழில் முனைவோராகவும் , தன்னம்பிக்கை உடையவராகவும் மாற்றியிருக்கிறது. மனித வாழ்க்கை என்பது சர்வைவல்தான். எப்படியான சூழலாக இருந்தாலும் எப்படியான இடையூறாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரியாக நம்மை நாமே தகவமைத்துக்கொண்டுதானே கடந்தாக வேண்டியிருக்கிறது. அப்படித்தான் இங்கு ஒரு கிராமமே நாகரீக உலகத்திற்கு ஏற்ப தங்களை தாங்களே மாற்றியுள்ளனர்.
Chhattisgarh | Tulsi Village in Raipur turns into a YouTubers' hub, with a large number of locals creating content for the online video sharing and social media platform and having their own channel on it.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 30, 2022
Locals create content for both educational and entertainment purposes. pic.twitter.com/eGdjANBMtE
கன்டென்ட் கிரியேட்டர்ஸ்:
சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள துல்ஸி கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். சிலர் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தள பக்கத்தில் கண்டெண்ட் கிரியேட்டர்களாகவே மாறியிருக்கின்றனர். கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்டவர்களிடன் சொந்தமாக யூடியூப் சேனல்கள் உள்ளது. அதில் பொழுதுபோக்கு தவிர கல்வி போன்ற கண்டெண்டுகளையும் துல்ஸி கிராம யூடியூபர்கள் வழங்குகின்றனர்.
Seeing us, people started making videos for YouTube, later for TikTok & now even for Reels. I've an MSc Chemistry degree. I was a part-time teacher & had a coaching institute. Earlier, I earned Rs 12,000-Rs 15,000/month. Now, we earn Rs 30,000-35,000/month: Jai Verma, a YouTuber pic.twitter.com/O5RZfA006W
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 30, 2022
முன்னோடியாக இருந்த இளைஞர்கள் :
முதன் முதலாக அந்த கிராமத்தில் ஞானேந்திர சுக்லா மற்றும் ஜெய் வர்மா ஆகிய இருவர்தான் யூடியூப் பக்கத்தை துவங்கியிருக்கின்றனர். அவர்களை பார்த்துதான் மற்றவர்களும் ஆர்வமாக இருந்திருக்கிறது. தற்போது அந்த ஊரே மொபைலும் கையுமாக கண்டெண்ட் தேடி அழைகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதில் இளைஞர் ஒருவர் கோச்சிங் நிறுவனத்தில் ஆசிரியராக வேலைப்பார்த்து வந்துள்ளார். அவர் MSc Chemistry படித்தவர் . அவருக்கு சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கிடைத்திருக்கிறது. தற்போது யூடியூப்பில் தனக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை சம்பளம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா காலக்கட்டம் இன்று பல இளைஞர்களை சொந்தமாக நடைப்போட வைத்திருக்கிறது. வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்கள் அதிகமாக சமூக ஊடகங்களை பயன்படுத்த துவங்கினர். அதன் வாயிலாக வருமானங்களை ஈட்டவும் கற்றுக்கொண்டுவிட்டனர். அந்த வகையில் துஸ்லி கிராம இளைஞர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வருமானம் ஈட்டவும் , கிராமத்து இளைஞர்களுக்கு சோஸியல் மீடியா அத்துப்படிதான் என காட்ட துவங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது!