Hyderabad : கூடுதலாக டிக்கெட் தொகை வசூலித்த தியேட்டர்கள்; ரூ. 12.81 லட்சம் அபராதம்
திரைப்பட டிக்கெட்டிற்கு கூடுதல் தொகை வசூலித்ததற்காக தெலுங்கானாவில் சினிமா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட டிக்கெட் கட்டணத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டி வசூல் செய்த தியேட்டருக்கு ரூ. 12.81 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் சைத்தன்யபுரி பகுதியில் மித்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஷாலினி, ஷிவானி என்ற இரண்டு திரையரங்குகளை நடத்தி வருகிறது. இங்கு திரைப்பட பார்க்க ரூ.11.74 கூடுதலாக டிக்கெடிற்கு வசூலித்ததாக சொல்லப்படுகிது.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதின் விவரம்:
சந்தோஷ் சஞ்சய், சந்தீப் குமார் இருவரிடம் டிக்கெட்டிற்கு ரூ.11.74 வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் வரி விதித்துள்ளதாகவும் தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையத்திடம் (National Anti-profiteering Authority (NAA)) புகார் அளித்திருந்தனர். அன்றைய நிலவரப்படி, ஜி.எஸ்.டி. வரி 18% -ல் இருந்து 12% ஆக குறைந்திருந்தபோதிலும், வரி தொகையை டிக்கெட்டின் விலையில் உயர்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 'Executive category'- க்கு ரூ.11.74 -யும் ’gold recliner category''-யில் ரூ.16.06 தொகையும் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மூன்று ஆண்டுகள் தேசிய தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையத்தில் நடைபெற்றது. மிராஜ் நிறுவனம் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டது. மேலும், ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதின் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தது. மேலும், அதன்மூலம் 49.5% டிஸ்டிப்யூட்டர்ஸ்களிடம் இருந்து வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்திருந்தது. அதோடு ரூ.5.33 லட்சம் அவர்களுக்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வழக்கின் தீர்ப்பில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகையை திரும்ப வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய நுகர்வோர் நிதிக்கு ரூ.6.4 லட்சமும், தெலங்கானா மாநில நுகர்வோர் நல நிதிக்கு ரு.6.41 லட்சம் தொகையும் சேர்த்து மொத்தம், ரூ. 12.81 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.
மேலும் வாசிக்க.