மேலும் அறிய

Leo Gautham Menon: காஷ்மீரில் கடும் குளிரில்... லியோ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய கௌதம் மேனன்!

கடும் குளிருக்கு மத்தியில் லியோ படப்பிடிப்பு குழுவினருடன் கௌதம் மேனன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

லியோ படக்குழுவினருடன் கௌதம் மேனன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இயக்குநர் கௌதம் மேனம் நேற்று தன் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

தமிழ் சினிமாவில் காலத்துக்கேற்ற அழகிய காதல் படங்களுடன், அனைவரும் காதலில் விழும் ரசனையான ஹீரோயின்களை அறிமுகப்படுத்தி தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் கௌதம் மேனன்.

மின்னலே தொடங்கி 12 திரைப்படங்களை இயக்கியுள்ள கௌதம் மேனன், தெலுங்கு, இந்தி படங்கள், ஆந்தாலஜி வெப் சீரிஸ்களிலும் பணியாற்றியுள்ளார்.

காதல் மட்டும் அல்லாது நடுநிசி நாய்கள், வேட்டையாடு விளையாடு என ஆக்‌ஷன், க்ரைம் த்ரில்லர் என வேறு பாணி சினிமாக்களையும் தனித்துவமாகவும் ஸ்டைலிஷ் சினிமாக்களாகவும் வழங்கியுள்ள கௌதம் மேனன் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் மலையாள சினிமாக்கள் தொடங்கி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் கௌதம் மேனன் தற்போது நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இய்க்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், கடும் குளிருக்கு மத்தியில் லியோ படப்பிடிப்பு குழுவினருடன் கௌதம் மேனன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட படக்குழுவினர் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம்,  கோலிவுட்டை தனது கல்ட் கிளாசிக் படங்களின் மூலம் மறுவரையறை செய்தவருக்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு ப்ளடி ஸ்வீட் சாகச ஆண்டாக அமையட்டும்” என வாழ்த்தியுள்ளது. இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

 

2021ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் - தயாரிப்பாளர் லலித் குமார் இணைந்துள்ள படம் லியோ. 

அனிருத் இசையமைக்க,த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், சஞ்சய் தத், பிரியா ஆனந்த்,  மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, அர்ஜூன்,மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பிப்ரவரி 3ஆம் தேதி லியோ டைட்டில் டீசர் வெளியான நிலையில், வரும் அக்டோபர் 19ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget