அனைவர் முன்பும் நிர்வாணமாக்கிய ஆசிரியை..! தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவி..! என்ன நடந்தது..?
அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக அவர் TMH க்கு அனுப்பப்பட்டார். டாக்டர்களின் கூற்றுப்படி, சிறுமிக்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜார்கண்டின் ஜாம்ஷெத்பூரில் ஒரு பள்ளியில், காப்பி அடித்து எழுதுவதை தடுப்பதற்காக மாணவியின் ஆடைகளை அவிழ்த்து பிட் இருக்கிறதா? என்று சோதனை செய்ததால் மாணவி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.
80% தீக்காயம்
பள்ளிகளில் நடைபெறும் ஆசிரியர் அத்துமீறல்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. தலித் மாணவர் பானையில் தண்ணீர் குடித்ததற்காக மாணவனை கொன்ற சம்பவம், ஆசிரியர் மாணவரை அடித்தே கொன்ற சம்பவம், என்று ஆசிரியர்கள் தங்கள் வரம்பை மீறி செயல்படும் செய்திகள் நாட்டை உலுக்கி வருகிறது.
தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் 'பிட்' வைத்திருப்பதாக சந்தேகம் வந்ததால், சம்பந்தப்பட்ட மாணவியை ஆசிரியை ஒருவர் மிரட்டி ஆடைகளை களையச் சொன்னதாக தெரியவந்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள சாரதாமணி பெண்கள் பள்ளியில் மாணவி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடந்துள்ளளது.
பலத்த தீக்காயங்களுடன் சிறுமி எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக அவர் TMH க்கு அனுப்பப்பட்டார். டாக்டர்களின் கூற்றுப்படி, சிறுமிக்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
'பிட்' இருக்கிறதா என்று பரிசோதனை
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் அரசு உதவிப் பெறும் ஆண் - பெண் இருபாலரும் சேர்ந்து பயிலும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 1,500க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அந்தப் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்ததன் இடையே, கடந்த வியாழக்கிழமை 9-ம் வகுப்புக்கு அறிவியல் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது பள்ளியால் உருவாக்கப்பட்ட காப்பி அடிப்பதை தடுக்கும் பறக்கும் படையில் இருந்து வந்த ஆசிரியை சந்திரதாஸ் அந்த மாணவியிடம் பிட் உள்ளதாக சந்தேகித்துள்ளார். உடனே பரிசோதனை செய்வதற்காக அனைவரின் முன்பாகவும் ஆடைகளை கழற்ற சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
வலுக்கட்டாயமாக ஆடையை அகற்றினார்
மறுத்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்ற வைத்துள்ளார். நிர்வாணமாக சோதனை செய்யப்பட்ட அவரிடம் பிட் எதுவும் இல்லாததால் ஆசிரியர் சென்றிவிட்டார். அனைவர் முன்பும் ஆடைகளை களையச்செய்ததை அவமானமாக கருதிய மாணவி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம், வகுப்பறையில் உள்ள அனைத்து சிறுமிகளின் முன்னிலையிலும் தனது ஆடைகளை அகற்றி பரிசோதனை செய்ததாக கூறியுள்ளார். ஆனால், ஆடைகளை அவிழ்த்து விசாரணை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை பள்ளியின் பிரின்சிபல் மறுத்துள்ளார்.
தீக்குளித்த மாணவி
குடும்ப உறுப்பினர்களின் கூறியதாவது, சிறுமி மாலை 4.30 மணியளவில் பள்ளியில் இருந்து வந்தாரென்று கூறுகின்றனர். வந்தபோது மிகவும் அமைதியாக இருந்தாரென்றும், தன் அறைக்கு சென்ற அவர் தனது இரு சகோதரிகளையும் வேறு அறைக்கு செல்லச் சொன்னார் என்றும் கூறுகின்றனர். 10 நிமிடங்களுக்குப் பிறகு அவரது அறையில் இருந்து அலறல் சத்தம் வந்து புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தீயில் சூழ்ந்து கதறிக்கொண்டு இருந்துள்ளார். உடல் முழுவதும் தீ பரவி இருந்தது. அவசரத்தில் எப்படியோ தீயை அணைத்துவிட்டு ஏஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
சிகிச்சையின் போது, வெள்ளிக்கிழமை சமூக அறிவியல் தேர்வு இருப்பதாக மருத்துவரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். "காப்பி அடித்ததாக குற்றம் சாட்டிய, சந்திரதாஸ் மேடம் என் ஆடைகளைக் கழற்றி, எல்லாப் பெண்கள் முன்னிலையிலும் என்னைப் பரிசோதித்தார். என்னிடம் 'பிட்' எதுவும் இல்லை. நான் மிகவும் அவமானமாக உணர்ந்தேன். அதனால்தான் நான் தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறேன். அவமானத்தால் மனமுடைந்த நான் என் உடலில் மண்ணெண்ணெய் தெளித்து தீ வைத்துக் கொண்டேன் என்றார்", என்று மருத்துவர் கூறினார்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050