மூன்றாவது கணவராக மிஸ்டு கால் காதலன்! மனைவியை தேடிய முதல் இரண்டு கணவர்கள்! குழப்பத்தில் போலீசார்!
மூன்றாவது கணவருடன் சென்ற மனைவியை கண்டுபிடித்து தருமாறு முதல் இரண்டு கணவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த பெண், சில வருடங்களுக்கு முன் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, இரண்டாவதாக மற்றொரு நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மூன்றாவது நபர்:
இந்நிலையில் அவரது செல்போனுக்கு தவறான மிஸ்டு கால் அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுக்கும், தவறான அழைப்பு விடுத்து நபருக்கும் இடையே காதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது, இரண்டாவது கணவர் மற்றும் 2 குழந்தைகளை விட்டு 3 நபருடன் அந்த பெண் சென்றுவிட்டார்.
இணைந்த 2 கணவர்கள்:
மனைவி சென்று விட்டதை அறிந்த இரண்டாவது கணவர், பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தனது கவலையை முதல் கணவரிடம் சென்று தெரிவித்துள்ளார். இரண்டாவது கணவர் 2 குழந்தைகளுடன் தவிப்பதை உணர்ந்த முதல் கணவர், அவருக்கு உதவ முன் வந்தார். இந்நிலையில் இருவரும் ஒன்று சேர்ந்து மனைவியை தேடியுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்:
மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். அப்போது, அந்த பெண்ணின் கணவர் யாரென்று கேட்க, தாங்கள்தான் என்று இருவரும் சொல்ல காவலர் குழப்பமடைந்தார். பின்பு காவலரிடம் அவர்களது நிலையை எடுத்து கூறினர். இப்போது உங்கள் மனைவி எங்கே சென்றார், ஏன் சென்றார் என் காவலர் கேட்க, மூன்றாவது நபரிடம் சென்றுவிட்டதாக கூறுவதை காவலர் வியப்படைந்தார்.
புகார்:
இரண்டு குழந்தைகளுடன் வாழ்வதற்கு சிரமப்பட்டு வருவதால் , எப்படியாவது மனைவியை கண்டுபிடித்து தருமாறு இரண்டாவது நபர் காவல் நிலையத்தில் புகார் எழுதி கொடுத்தார். புகாரை பெற்று கொண்ட நாக்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
Also Read:Crime : வேலைக்கு போகச்சொன்ன மனைவி.. கொடூரமாகக் கொன்ற நபர்.. பதைபதைக்க வைத்த மரணம்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்