Tamilisai Soundararajan transfer: தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறாரா?
பாஜக ஆளும் அரசு இருக்கும் மாநிலத்தில் ஏதாவது ஒன்றுக்கு தமிழிசை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
![Tamilisai Soundararajan transfer: தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறாரா? Telangana governor Tamilisai Soundararajan likely to be transferred to other state Tamilisai Soundararajan transfer: தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறாரா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/77c09c0de5e9f49eb13ba3e42999fedb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர் வேறு மாநிலத்திற்கு ஆளுநராக மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை, கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கான ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, புதுச்சேரியின் துணை ஆளுநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தெலங்கானா அரசுடன் நல்ல உறவில் இருந்த தமிழிசைக்கு, அம்மாநில முதலமைச்சருடன் வாக்குவாதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கான மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்திருக்கிறது. இதனால், ஆளுநர் தமிழிசைக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாடு எழுந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரின்போது ஆளுநர் உரை புறக்கணிக்கப்பட்டது. அதனை அடுத்து, யாத்ரி லட்சுமி நரசிம்ம கோவில் புதுபிக்கப்பட்ட திறப்பு விழாவிலும் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார்.
நான் சூப்பராக செயல்படுகிறேன் என புதுச்சேரியில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்
— ABP Nadu (@abpnadu) April 16, 2022
- புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்https://t.co/wupaoCQKa2 | Puducherry #TNPolitics #TamilisaiSoundararajan @DrTamilisaiGuv pic.twitter.com/KyLDrw8WFI
இந்நிலையில், டெல்லி சென்றிருந்த தமிழிசை பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, சந்திரசேகர ராவ் கட்சி பெண் ஆளுநரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இதனால், முழு நேர புதுச்சேரி மாநில ஆளுநராகவும், கேரள மாநிலம் அல்லது பாஜக ஆளும் அரசு இருக்கும் மாநிலத்தில் ஏதாவது ஒன்றுக்கு தமிழிசை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
பிற முக்கியச் செய்திகள்:
சட்டப்பேரவை விவாதம் நேரலை https://t.co/yUxqa7Ihw4
— ABP Nadu (@abpnadu) April 18, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)