Nirmala Sitharaman : ரெட்மீக்கு ரெட் அலர்ட்.. பாராளுமன்றத்தில் உண்மையை உடைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!
வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக சீன மொபைல் கம்பனிகளுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளதாக பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக சீன மொபைல் கம்பெனிகளுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளதாக பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் மூன்று மொபைல் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் வழக்குகளை அரசாங்கம் விசாரித்து வருவதாகவும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை ராஜ்யசபாவில் தெரிவித்தார். கேள்வி நேரத்தின்போது கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஒப்போ, விவோ இந்தியா மற்றும் சியோமி ஆகிய மூன்று நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டால், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
வருவாய் புலனாய்வுத்துறை (டிஆர்ஐ) மொபைல் நிறுவனமான ஒப்போவுக்கு மொத்த சுங்க வரி ரூ. 4,389 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மேலும் இவை சில பொருட்களின் தவறான கணக்குகளின் அடிப்படையில் சுங்க வரியில் குறைந்த தொகையை செலுத்தியுள்ளது எனவும் நிதியமைச்சர் சீதாராமன் கூறியுள்ளார். மேலும், இதனால் சுமார் 2,981 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. "சுங்க வரி செலுத்தும் நோக்கத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை குறைத்து மதிப்பிட்டு, 1,408 கோடி ரூபாய் ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்" ரூ.4,389 கோடிக்கு எதிராக தானாக முன்வந்து ரூ.450 கோடி டெபாசிட் செய்ய வந்துள்ளனர் என்றார்.
மற்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை, Xiaomi ஆனது அசெம்பிள் செய்யப்பட்ட MI மொபைல் போன்களைக் கையாளும் மற்றொரு மொபைல் நிறுவனம், அவர்களுக்கு மூன்று ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, தோராயமாக சுமார் ரூ. 653 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. மேலும், மூன்று ஷோ காஸ் நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் ரூ. 46 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்துள்ளனர்," என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
அதேபோல் மூன்றாவது நிறுவனம் விவோ இந்தியா, இதற்காக ரூ.2,217 கோடிக்கான கோரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதற்காக அவர்கள் ரூ.60 கோடியை தானாக முன்வந்து டெபாசிட் செய்துள்ளதாக நிதியமைச்சர் சபையில் தெரிவித்தார். "இவை தவிர, அதே குழுவான விவோவால் நிறுவப்பட்ட 18 நிறுவனங்களை ED கவனித்து வருகிறது, அந்த 18 நிறுவனங்கள் தானாக முன்வந்து 62 கோடி ரூபாய் டெபாசிட்டாக அனுப்பியுள்ளனர், ஆனால் இந்தியாவிற்கு வெளியே உள்ள தாய் நிறுவனம் மொத்த விற்பனை 1.25 லட்சம் கோடியாக உள்ளது. "ரூ. 1.25 லட்சம் கோடி மொத்த விற்பனையில், விவோ இந்த 18 நிறுவனங்களின் மூலம் பெரிய அளவிலான நிதியை மாற்றியுள்ளது, மேலும் விவோ இந்தியா, இந்தியாவுக்கு வெளியே உள்ள அதன் தாய் நிறுவனத்திற்கு 0.62 லட்சம் கோடியை அனுப்பியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்".
மத்திய அரசின் நடவடிக்கையால் இந்த மூன்று நிறுவனங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தால், இந்த மூன்று நிறுவனங்கள் இந்தியாவில் தொடர்ந்து வியாபரம் செய்ய அனுமதி அளிக்கப்படாது. முன்னனி நிறுவனங்களான இவைகளுக்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் இந்திய மொபைல் சந்தையில் பெரும் வெற்றிடம் உருவாகும் என பொருளாதார நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்