Air India Vistara : ஏர் இந்தியாவை, விஸ்தாராவுடன் இணைக்கிறது டாடா குழுமம்.. எப்போது? முழு விவரம்..
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், டாடா சன்ஸ் நிறுவனமும் இணைந்து ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கின்றன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், டாடா சன்ஸ் நிறுவனமும் ஒருமித்து ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கின்றன.
இதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 250 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்கிறது. 2024 மார்ச் மாதத்தில் இந்த இணைப்பு சாத்தியமாகும் எனத் தெரிகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 சதவீத பங்குகளைக் கொடுக்கும். இப்போதைக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விஸ்தாராவில் 51 சதவீத பங்குகள் வைத்துள்ளன. 49% டாடா சன்ஸிடம் உள்ளது.
விமான நிறுவனங்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றன. ஃபுல் சர்வீஸ் கேரியர். இதில் எகானாமி மற்றும் பிஸினஸ் வகுப்பு இருக்கைகள் இருக்கும். ஆனால் டாடா குழுமத்தின் விஸ்தாரா இவை இரண்டுக்கும் இடையில் ப்ரீமியம் எகானமி என்னும் மூன்றாவது பிரிவையும் சேர்த்தது. ஃபுல் சர்வீஸ் கேரியருக்கு அடுத்து குறைந்த கட்ட சேவை (எல்சிசி) மற்றும் மிகவும் குறைந்த கட்டண சேவை (யு.எல்.சி.சி.) ஆகிய பிரிவுகள் உள்ளன.டாடா குழுமத்தில் இரண்டு நிறுவனங்கள் உள்ளன. டாடா குழுமமும் சிங்கப்பூர் ஏர்லைனஸ்ம் (49%) இணைந்து . ஃபுல் சர்வீஸ் கேரியர் நிறுவனமான விஸ்தாராவை நடத்துகிறது.டாடா குழுமமும் ஏர் ஏசியா bhd (16%)-ம் இணைந்து ஏர் ஏசியா இந்தியா என்னும் பட்ஜெட் விமான நிறுவனத்தை நடத்துகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏர் இந்தியாவை மத்திய அரசிடமிருந்து டாடா சன்ஸ் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது.
Tata Group announces the consolidation of its airlines, Vistara and Air India by March 2024. pic.twitter.com/40QW2pBFzQ
— ANI (@ANI) November 29, 2022
இந்தச் சூழலில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், டாடா சன்ஸ் நிறுவனமும் இணைந்து ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கின்றன. இதற்காக கூடுதல் முதலீட்டை செலுத்தவுள்ளன. டிஜிசிஏ அளித்த தகவலில் 2022 அக்டோபர் நிலவரப்படி டாடா குழுமத்தின் ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா ஆகியன சேர்ந்து 25.9 சதவீதம் சந்தை மதிப்புள்ள பங்குகள் வைத்துள்ளன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா சன்ஸ் ஆகியவை ஏர் இந்தியா, விஸ்தாராவை இணைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து ரூ 2,058.5 கோடியை பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா குழுமத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லையன்ஸ் சேவைகள், சொத்துக்கள் என அனைத்தையும் மார்ச் 2024க்குள் முடிக்கப்பட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விஸ்தாரா ஏர் இந்தியா இணைப்பு மூலம் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் ஏர் இந்தியா என்னும் வரலாறு சிறப்பு மிக்க நிறுவனத்தில் 25 சதவீத பங்குகளைப் பெற உள்ளது.