Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
இலவச தடுப்பூசி குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல்,சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
* ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
* கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு 8 மாதங்கள் வரை நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் நவம்பர் மாதம் வரை நியாய விலை கடைகளில் 80 கோடி ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் அளிக்கப்படும் - பிரதமர் மோடி
* தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்துவரும் கொரோனா தொற்றின் அளவானது, நேற்று 19ஆயிரத்து 448-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய சில நாள்களைப் போலவே, குணமானவர்களின் எண்ணிக்கை தொற்றுப்பதிவைவிட அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 31ஆயிரத்து 360 பேர் குணமாகியுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 351 பேர் உயிரிழந்தனர். தற்போது, மாநில அளவில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றியதால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் இருக்கின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
* கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து, தமிழக அரசின் பாடத்திட்டங்களே புதுவையிலும் பின்பற்றப்படுவதால் புதுவையிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் -டாக்டர் ராமதாஸ் அறிக்கை.
* வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலம் மீட்பு. 10 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது.
* கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்துகள் வாங்க ரூ.25: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
* தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை; 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரைவுபடுத்தப்படும் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
* ஜெஃப் பெஸோஸ் அடுத்த மாதம் ஜூலை 20-ஆம் தேதி தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
* அண்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய மகளிர் அணி புறப்படும் முன்பாக டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை மற்றும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடிய இந்திய மகளிர் அணிக்கான சம்பள பாக்கி இரண்டையும் பிசிசிஐ வழங்கியுள்ளது.
’இந்த பொறுப்பு சித்த மருத்துவத்துக்கான அங்கீகாரம்!’ - கு.சிவராமன்