Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
* அதிமுகவின் சட்டப்பேரவை துணைத் தலைவராக ஒ.பன்னீர்செல்வமும், கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
* கட்சியின் விதிகளுக்கு எதிராக சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாக கூறி, அ.தி.மு.க.வில் இருந்து 15 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
*பாமகவை விமர்சித்து பேசியதற்காக அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
* தமிழ்நாட்டில் நேற்று புதியதாக 12 ஆயிரத்து 772 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 ஆயிரத்து 561 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 36 ஆயிரத்து 884 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 254 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
* ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பான்-ஆதார் இணைப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா? விவரமா தெரிஞ்சுக்கோங்க!
* கொரோனா பாதிப்பு நிவாரணம் இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் 14 மளிகை தொகுப்பு இன்று ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
* தென்மேற்கு பருவக்காற்று வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை: கோவை, நீலகிரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்
* பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் நரேந்திர மோடி தினமும் ஏற்றி வருகிறார். பணவீக்கம் உயர்வு பற்றியும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்.
* டாஸ்மாக்கில் மதுவிற்பனையில் ஒரேநாளில் ரூபாய் 165 கோடி வசூல்; மதுரை மண்டலத்தில் 49 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு விற்பனை.
* யூரோ கால்பந்து தொடரில் ஸ்காட்லாந்தை செக் குடியரசு வீழ்த்தியது. ஸ்பெயின் - ஸ்வீடன் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
* வலதுசாரி சிந்தனையாளர் கிஷோர் கே சுவாமி கைது தொடர்பாக பாஜகவின் காய்த்ரி ரகுராம் மற்றும் அண்ணாமலை ஆகியோர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
* ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
* ரூ.2 கோடி மதிப்பு நிலத்தை ரூ.18.5 கோடிக்கு வாங்கியது அம்பலம் - அயோத்தி ராமர் கோயில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல்
* ஒரு மணி நேரத்தில் ரூ.73,000 கோடி இழந்தததால் ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் அந்தஸ்தை அதானி இழக்கிறார்.
* தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சஞ்சரி விஜய் சாலை விபத்தில் காலமானார்.
இது போன்ற இன்னும் பல செய்திகளை விரைவாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் அறிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்!
''இருபுனலும் வாய்ந்த மலையும்..’’ குறள் சொல்லும் சேதி - கல்வெட்டு புதையலும்.. எல்லீஸ் வரலாறும்.!