Breaking News LIVE Today: தமிழ்நாட்டில் இன்று 1,051 நபர்களுக்கு புதியதாக கொரோனா...!
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட வாரியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அவற்றில் பேரூராட்சிகள் 74.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நகராட்சி பகுதிகளில் 68.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 52.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பேரூராட்சியில் 80.14 சதவீத வாக்குகளும், நகராட்சியில் 81.37 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
1.அரியலூர் – 75.69 சதவீதம்
2.செங்கல்பட்டு – 55.30 சதவீதம்
3.சென்னை – 43.59 சதவீதம்
4. கோவை – 59.61 சதவீதம்
5.கடலூர் – 71.53 சதவீதம்
6. தர்மபுரி – 80.49 சதவீதம்
7.திண்டுக்கல் – 70.65 சதவீதம்
8. ஈரோடு – 70.73 சதவீதம்
9. கள்ளக்குறிச்சி – 74.36 சதவீதம்
10. காஞ்சிபுரம் – 66.82 சதவீதம்
11. கன்னியாகுமரி – 65.72 சதவீதம்
12. கரூர் – 76.34 சதவீதம்
13. கிருஷ்ணகிரி – 68.52 சதவீதம்
14.மதுரை – 57.09 சதவீதம்
15.மயிலாடுதுறை – 65.77 சதவீதம்
16.நாகப்பட்டினம் – 69.19 சதவீதம்
17.நாமக்கல் – 76.86 சதவீதம்
18.பெரம்பலூர் – 69.11 சதவீதம்
19. புதுக்கோட்டை – 69.61 சதவீதம்
20. ராமநாதபுரம் – 68.03 சதவீதம்
21. ராணிப்பேட்டை – 72.24 சதவீதம்
22. சேலம் – 70.54 சதவீதம்
23. சிவகங்கை – 67.19 சதவீதம்
24. தென்காசி – 70.40 சதவீதம்
25. தஞ்சை – 66.12 சதவீதம்
26.தேனி – 68.94 சதவீதம்
27. நீலகிரி – 62.68 சதவீதம்
28. தூத்துக்குடி – 63.81 சதவீதம்
29. திருச்சி – 61.36 சதவீதம்
30.திருநெல்வேலி – 59.65 சதவீதம்
31. திருப்பத்தூர் – 68.56 சதவீதம்
32. திருவள்ளூர் – 65.61 சதவீதம்
33.திருவண்ணாமலை – 73.46 சதவீதம்
34.திருவாரூர் – 66.25 சதவீதம்
35. வேலூர் – 66.68 சதவீதம்
36. விழுப்புரம் – 72.39 சதவீதம்
37.விருதுநகர் 69.24 சதவீதம்
38.திருப்பூர் – 60.66 சதவீதம்
தமிழ்நாட்டில் இன்று 1,051 நபர்களுக்கு புதியதாக கொரோனா...!
தமிழ்நாட்டில் இன்று புதியதாக 1,051 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரத்து 164 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் இன்று 3 ஆயிரத்து 561 நபர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று !
இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 95வயதான இவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் - 5 மணி நிலவரப்படி 63.44% வாக்குகள் பதிவு
ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.
உக்ரைன் பதற்றம்- இந்திய தூதரகம் எச்சரிக்கை !
உக்ரைன்-ரஷ்யா இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.