Breaking News LIVE Today: ரஷ்யா நிச்சயமாக போரை விரும்பவில்லை - அதிபர் விளாடிமிர் புதின்
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த 12 ம் வகுப்பு வணிக கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்கானது. ஏற்கனவே, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு உயிரியல் வினாத்தாள் வெளியானநிலையில் இன்று மீண்டும் வணிக கணித பாடத்திற்கான தேர்வு வினாத்தாள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா நிச்சயமாக போரை விரும்பவில்லை - அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்யா நிச்சயமாக போரை விரும்பவில்லை என்று மாஸ்கோவில் உக்ரைன் விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பதில் அளித்துள்ளார்.
ஆக்கிரப்புகளை வரன்முறைப்படுத்துவதை ஏற்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
ஆக்கிரப்புகளை வரன்முறைப்படுத்துவதை ஏற்க முடியாது என்று ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளே மழைக்கால வெள்ளத்திற்கும், கோடைக்கால பஞ்சத்திற்கும் காரணம் என்றும், நில மாஃபியாக்கள் ஆக்கிரமிப்புகளில் ஏழைகளை குடியமர்த்தி அரசிடம் வரன்முறை செய்கின்றன என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
திம்பம் மலைபாதையில் போக்குவரத்து தடை தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற முடியாது.
திம்பம் மலைபாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு விடிக்கப்பட்ட தடை தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம்
ஒரு நாள் ஆட்சி மாறும் , காட்சிகள் மாறும் - ஈபிஎஸ்
பாஜகாவிற்கு அதிமுக டப்பிங் பேசுகிறது என்கிறார்கள் ஆனால் நாங்கள் தனித்து தான் போட்டியிடுகிறோம். காவல் துறையினர் நேர்மையாக இருக்க வேண்டும் . ஒரு நாள் ஆட்சி மாறும் , காட்சிகள் மாறும் என எதிர்கட்சித்தலைவர் ஈபிஎஸ் கூறினார்
உள்ளாட்சி தேர்தல் வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்விற்கு மாற்றம்