Breaking News LIVE Today: ஹிஜாப் தொடர்பான வழக்கை, கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு.
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது. அனைவரும் பொதுவான சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்று கூறி இந்து அமைப்புகளும், அம்மாநில அரசுமே பேசி வருவது சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது.
இதற்கு பதிலடி தருகிறோம் என்று இந்து மாணவர்களும் மாணவிகளும் காவித் துண்டைக் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வருகின்றனர். இன்று (பிப்.8) சமூக வலைதளங்களில் வைரலான ஹிஜாப் அணிந்து தனியாக வரும் மாணவியை, காவித் துண்டணிந்த ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடும் மாணவர்கள் முழக்கமிடும் காட்சியைப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது.
ஷிமோகாவில் உள்ள ஒரு கல்லூரியில் தேசியக் கொடி இருந்த இடத்தில் காவிக் கொடியை ஏற்றி, மாணவர்கள் ஆர்ப்பரித்துள்ளனர். ஹிஜாப் விவகாரத்தில் முகிழ்த்த போராட்டம், வன்முறையாக மாறி 3 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் வழக்கு : கூடுதல் அமர்வுக்கு மாற்றம்.
ஹிஜாப் தொடர்பான வழக்கை, கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு.
ராமஜெயம் கொலை - சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் 10 ஆண்டுகளாக சிபிசிஐடி, சிபிஐ விசாரித்தும் கொலைக்கான நோக்கம் கூட கண்டறியப்படாததால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு.சிபிஐ விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றும், தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டுமெனவும் ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவு
மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர் மீட்பு
கேரளாவின் குரும்பச்சி பகுதியில் மலை இடுக்கில் சிக்கி தவித்த 23 வயது இளைஞர் பாபு நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். 43 மணி நேர போராட்டத்திற்கு பின் இந்திய ராணுவ வீரர்கள் மீட்டனர்.
கள்ளமில்லா மாணவர் மத்தியில் மதவாத விஷச்சுவரா? - கமல்
கள்ளமில்லா மாணவர் மத்தியில் மதவாத விஷச்சுவரா? என்று கர்நாடகாவின் நடைபெற்று வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பது கொடுமையானது - மலாலா
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி மறுப்பது கொடுமையானது - மலாலா