Breaking |சிறுமி மித்ராவின் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Background
மற்ற கட்சிகள் தனிநபர் கட்சிகள், பாஜகவைப் பொறுத்தவரை கூட்டுமுயற்சிதான் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. வயது, அனுபவம் என பல்வேறு விஷயங்களைக் கொண்டு பாஜக பொறுப்பளித்து வருகிறது என தெரிவித்துள்ளார்
சிறுமி மித்ராவின் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து
சிறுமி மித்ராவின் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ள தகவலை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவானம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மிக்க நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஓரிரு நாளில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என தகவல்..!
தமிழகத்தில் ஓரிரு நாளில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என தகவல்..!





















