News Headlines: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, அரையிறுதியில் பாகிஸ்தான்... மேலும் சில முக்கியச் செய்திகள்
Headlines Today, 3nd Nov: இன்றைய தினத்தில் அறியவேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
தமிழ்நாடு:
குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பறிக்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பா.ம.க ஓயாது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். தமிழக அரசு உரிய ஆவணங்களுடன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று நம்புவதாகவும் கூறினார்.
சென்னையில் கனமழை காரணமாக தலைமை செயலக அலுவலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் இருந்த பழமையான மரம் ஒன்று வேரோடு திடீரென சாய்ந்தது. இதில், முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் கவிதா சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தார்.
தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த மரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில், உயிரிழந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் திருமதி. கவிதா அவர்களின் உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அஞ்சலி செலுத்தினார். pic.twitter.com/iXodkPhq2C
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 2, 2021
புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு ரூ. 142.16 கோடி மதிப்பீட்டில் 3510 குடியிருப்புகள், ரூ. 30 கோடி மதிப்பீட்டில் முகாம்களில் அடிப்படை திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி, முகாம்வாழ் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். pic.twitter.com/KzrKn5M4tm
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 2, 2021
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் குடிமைப் பணி பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கு உதவித் தொகையுடன் பயிற்சி பெற வரும் 7ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
13 மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மேற்குவங்கம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும், தெலுங்கானா, அசாம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
பருவநிலை மாற்றம் தொடர்பான கிளாஸ்கோ உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லி புறப்பட்டார். முன்னதாக, கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர்,இந்தியாவில், 2030ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படுவதுடன், 2070ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் முற்றிலும் இல்லாத நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.
விளையாட்டு:
It never looked in doubt - Pakistan are the first team to confirm a place in the ICC Men's #T20WorldCup semi-finals 🇵🇰
— ICC (@ICC) November 2, 2021
Who will be joining them? 🤔#T20WorldCup | #PAKvNAM pic.twitter.com/FiKOaW2N5g
நேற்று நடைபெற்ற டி- 20 தகுதிச் சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான், பெர்முடா அணியை எதிர்கொண்டது. அனைவரும் யூகித்தது போல பாகிஸ்தான் அணி 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக பாகிஸ்தான் உள்ளது. மற்றொரு ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.