Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தை மாநிலங்களுக்கு வழங்குவதில் பாகுபாடு காட்டுவதில்லை என மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,448 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,14,335 ஆக சரிந்துள்ளது. ஒருநாள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 270. சிகிச்சை முழுமையாகப் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,058-ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் 1.13 லட்சம் கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்படாதது பற்றி தமிழ்நாடு அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!
அஇஅதிமுகவின் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்த அஸ்பயர் சுவாமிநாதன் அப்பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், அதிமுகவில் திறமைக்கு மதிப்பில்லை, தொலைநோக்கு பார்வையில்லை, வழிகாட்டுதல் இல்லை, வெளியேறுகிறேன் என அஸ்பயர் சுவாமிநாதன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்
சாட்டை யூட்யூப் சேனல் நடத்தி வந்த துரைமுருகன் மீது மூன்றாவதாக ஒரு வழக்கு தற்போது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதன்பெயரில் திருவிடைமருதூர் நீதிமன்றம் துரைமுருகனை பதினைந்து நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!
நோய் எதிர்ப்புத் தன்மைக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய விஞ்ஞானிகள் (National Technical Advisory Group on Immunization (NTAGI)), கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டிப்பதற்கான எந்த தரவுகளும் இல்லை என்ற தெரிவித்துள்ளனர்.
கோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் எடுக்கப்பட்டது என கோவித்-19 பணிகுழுத் தலைவர் டாக்டர் என் கே அரோரா தெரிவித்தார். இது குறித்து டிடி நியூஸ் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், " அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை சம்மந்தமான அடிப்படை அறிவியல்பூர்வமான காரணங்களினால் கொவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 4-6 வாரங்களில் இருந்து 12-16 வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அறிவியலின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் வகையில் திறந்த மற்றும் வெளிப்படைத் தன்மையிலான முறையை நாம் கொண்டுள்ளோம். கொவிட் பணிக்குழு அந்த முடிவை எடுத்தபோது, எதிர்ப்புக் குரல்கள் எதுவுமே இல்லை. இந்த விஷயம் குறித்து NTAGI குழுவில் ஒளிவு மறைவில்லாமல் விவாதித்தபோது அங்கும் ஏதும் எதிர்ப்புகள் எழவில்லை" என்று தெரிவித்தார்.
Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 891 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரோஹித் சர்மா & ரிஷப் பந்த் ஆகியோர் ஒரே புள்ளியில் அதே 6-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.