Breaking News LIVE: கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Breaking News LIVE Tamil: சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
LIVE
Background
Tamil Nadu Breaking News LIVE Updates:
கடலிலிருந்து நிலம் நோக்கி நகர்ந்து செல்லும் கனமழை மேகக்கூட்டங்கள் #ChennaiRains pic.twitter.com/0dllrNZEuu
— Tamilnadu Vaanilai(தமிழ்நாடு வானிலை) (@ChennaiRmc) November 26, 2021
மேற்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கனமழை அபாயம் காரணமாக சென்னை, விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 16 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.