Breaking News: ஜனவரி 16 - முழு ஊரடங்கு நாளில், மருந்துகள், பால் டெலிவரிக்கு மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி..
இன்றறைய முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
Tamil nadu latest news Live updates: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2.47 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய நாளை விட (1,94,720) 27% அதிகமாகும். தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்தியத்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலின் தற்போதைய நிலைகுறித்து , பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக மாநில முதலமைச்சர்களுடன் விவாதிக்க இருக்கிறார்.
ஜனவரி 16 - முழு ஊரடங்கு நாளில், மருந்துகள், பால் டெலிவரிக்கு மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி..
ஜனவரி 16 - முழு ஊரடங்கு நாளில், மருந்துகள், பால் டெலிவரிக்கு மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி..
154 கோடியே 61 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
நாடுமுழுவதும் 154 கோடியே 61 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை ஓமந்தூறார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் இடஒதுக்கீடு அளிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
2021-22 கல்வியாண்டில், மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் இடஒதுக்கீடு அளிக்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராபி பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்யலாம் - திருவள்ளூர் மாவாட்ட ஆட்சியர்
2021-22-ஆம் ஆண்டு ராபி பயிர்களுக்குக் கடன் பெற்ற மற்றும் கடன் பெறா விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பெயரில் உரிய காப்பீட்டுக் கட்டணத் தொகையைச் செலுத்தி பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என திருவள்ளூர் மாவாட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.