News Today LIVE: பொங்கல் பண்டிகையை ஒட்டி இயக்கப்பட்ட பேருந்துகள்.. போக்குவரத்துக்கழகத்துக்கு ரூ.138 கோடி வருவாய் - தமிழக அரசு
இன்றைய தினத்தின் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகள் அனைத்தையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். இந்த உரையாடலின் போது, மாவட்டங்களில் அரசு திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நேரடியாக கருத்துக் கேட்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி எனப்படும் அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் நேற்று இணைக்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போருக்கு பிறகு இந்தியா கேட்டில் அணையா விளக்கு நிறுவப்பட்டது. பின்னர் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா கேட்டில் தேசிய போர் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.
தமிழகத்தில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும், தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடை தொடரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிடுக - கமல்ஹாசன்
குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இந்தத் திருத்தம் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதோடு கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது என மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாரத பிரதமர் தேவ கவுடாவுக்கு கொரோனா தொற்று
முன்னாள் பாரத பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) அரசியல் கட்சித் தலைவருமான தேவ கவுடாக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




















