TN Headlines: உயரும் மேட்டூர் அணை நீர்வரத்து! நடிகர் விஜய்க்கு கண்டனம் - இதுவரை தமிழ்நாட்டில் நடந்தது என்ன?
Tamil Nadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Mettur Dam: அதிரடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 227 கன அடியாக உயர்வு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 43 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 227 கன அடியாக அதிகரித்துள்ளது.
TVK Vijay: ”ஆடு நனைவதாய் ஓநாய் அழுகிறது” - போதை பொருள் குறித்து பேசிய விஜய்க்கு கண்டனம்.. பரபர அறிக்கை
பொதுவெளியில் மட்டும் போதை பொருளை ஒழிப்பதுபோல் பேசியும், திரைப்படங்களில் அதனை மையப்படுத்தி நடிக்கும் நடிகர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், “இளம் தலைமுறையினரின் சீரழிவிற்கு போதை வஸ்துகளின் காட்சியமைப்பு கொண்ட திரைப்படங்களே பிரதான காரணம் என்பதால் நடிகர் விஜய் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கரூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாமக்கல் கோழிப்பண்ணையில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எல்லை கடந்து கூலித் தொழிலாளி வீடு புகுந்து அராஜகம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீது எஸ்.பி அலுவலகத்தில் பெண்மணி கண்ணீர் மல்க புகார்.
Vikravandi by election: ஒரு தலைமுறையை அழிக்கும் நபருக்கு ஆயுள் தண்டனை - செளமியா அன்புமணி அதிரடி
விழுப்புரம் : கள்ளச்சாராயத்தினை விற்பனை செய்வதன் மூலம் ஒரு தலைமுறையை அழிக்கும் நபருக்கு ஆயுள் தண்டனையை வழங்க சட்டதிருத்தம் கொண்டு வந்தது சரியானது என்றும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் அதனை எடுக்க மாநில அரசு தயங்குவதாக செளமியா அன்புமனி தெரிவித்துள்ளார்.
முற் புதர்களை மூலிகைத் தோட்டமாக மாற்றிய பஞ்சாயத்து தலைவர் கவிதா முருகன்! குவியும் பாராட்டு
தடங்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதர் மண்டி ருசிச் சந்துக்கள் ஏற்படுமாக இருந்த இடத்தினை தூய்மைப்படுத்தி அங்கு மக்களுக்கு பயனுள்ள வகையில் மூலிகை பசுமை தோட்டம் அமைக்க திட்டமிட்டுள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன்.
இந்த பசுமை தோட்டத்தில் பழச்செடிகள் மற்றும் மூலிகை செடிகள், வாட்டர் ஆப்பிள், மாதுளை, பச்சை அத்தி, மா, பலா, வாழை, கொய்யா, சீதா, சாத்துக்குடி, நாவல், நெல்லி, பபுல் பாஸ், எலுமிச்சை, செர்ரி பழம், சப்போட்டா, பதாம் உள்ளிட்ட பழச்செடிகளும், தென்னை, நொச்சி, பிரண்டை, கல்யாண முருங்கை, துளசி, கற்றாழை, வெற்றிலை, செம்பருத்தி, அரளி உள்ளிட்ட மூலிகை செடிகளும் வளர்க்கப்படுகிறது.