மேலும் அறிய

FM PTR On Budget : மத்திய பட்ஜெட் ஆலோசனை : தமிழ்நாட்டின் கோரிக்கை என்ன? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

டெல்லியில் பட்ஜெட் தொடர்பான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

டெல்லியில் நடைபெற்று வரும் 2023 - 2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மாநிலங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்ததாக தெரிய வந்தது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, ”தென்னிந்தியா, வட இந்தியா என்பதற்கு அப்பாற்பட்டு கிட்டதட்ட எல்லா மாநிலங்களும் மாநிலத்தில் நிதி உரிமைகள் குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். 

மாநிலங்களுடைய நிதி ஆதாரங்களையும், அதிகாரத்தையும் திருப்பி நிலைநாட்ட வேண்டும். எப்படி இந்திய அரசாங்கத்தில், வாஜ்பாய் அரசாங்கத்தில் இருந்ததுபோல கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதே கருத்தை அந்தந்த மாநில அமைச்சர்கள் சொன்னார்கள். 

அதேபோல், பொருளாதார நெருக்கடி உலகளவில் வருவதற்கான வாய்ப்பு உள்ள சூழ்நிலையில், மாநிலத்தின் கடன் நிலைகளின், ஜிஎஸ்டியையும் 2 வருடம் நீடிக்க வேண்டும் என்றும்,மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ. 11,185,82 கோடியை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைவெளியை களைய வேண்டும். இரண்டு அரசுகளும் தலா 49 சதவீதம் பங்களிப்பை அளிக்க வேண்டும். 

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியை இரு தரப்பும் 50-50 என்ற பங்களிப்பின் அடிப்படையிலான ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் 23-24 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு உரிய ரயில்வே திட்டங்களை வழங்க வேண்டும்" என்றார். 

தமிழ்நாட்டின் கோரிக்கை என்ன..? 

  • 15வது நிதிக்குழுவில் நமக்கு வரவேண்டிய 2,600 கோடி ரூபாய் மானியம் வெளியிடப்படவில்லை.
  • சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க 500 கோடி பரிந்துரை செய்யப்பட்டது. அதுவும் இன்னும் வரவில்லை.
  • 600 கோடி மதிப்பிலான தாம்பரம்- செங்கல்பட்டு 4வது ரயில் பாதை அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க கோரிக்கை.
  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்கவும் கோரிக்கை.
  • சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்க வேண்டும்.
  • அத்திப்பட்டு- கும்மிடிப்பூண்டி, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில் திட்டத்துக்கு நிதி தேவை.
  • அரக்கோணம்- காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இடையிலான இருவழி ரயில்பாதைக்கு நிதி ஒதுக்கவும் கோரிக்கை

இத்தகைய கோரிக்கைகளை தமிழ்நாட்டுக்கு விரைந்து செய்து தரவேண்டுமென தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget