Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 92.37% குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25,895 பேர் குனமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,49,927 ஆக குறைந்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா தொற்று பரவல் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக நாடு முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் செரோ சர்வே எனப்படும் ஆய்வை நான்காவது முறையாக நடத்த உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று புதியதாக 12 ஆயிரத்து 772 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 ஆயிரத்து 561 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 36 ஆயிரத்து 884 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இன்று மட்டும் 254 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
புதுவையில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 94 சதவீதமாக உயர்வு
புதுச்சேரியில் இன்று 309 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். புதுவையில் இன்றைய நிலவரப்படி, கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால், குணம் அடைந்தோர் எண்ணிக்கை 94 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயம் - தமிழக அரசு
தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கு அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. சாதாரண ஆம்புலன்சுக்கு முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 1,500ம், அடிப்படை ஆக்சிஜன் வசதி கொண்ட ஆம்புலன்சுக்கு முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 2 ஆயிரமும், உயர் ஆக்சிஜன்வாயு வசதி கொண்ட ஆம்புலன்சுக்கு முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கு 96,490 டோஸ் தடுப்பூசி - மத்திய அரசு திட்டம்
நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 96 ஆயிரத்து 490 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு வழங்க உள்ளது. இதுவரை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 26 கோடியே 68 லட்சத்து, 36 ஆயிரத்து 620 டோஸ்களை இலவசமாக வழங்கியுள்ளது இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் 25 கோடியே 27 லட்சத்து 66 ஆயிரத்து 396 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.40 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
உத்தரகாண்டில் ஜூன் 22-ந் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உத்தரகாண்டில் தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த பொதுமுடக்கம் வரும் ஜூன் 22-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கத்தில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்துள்ள சமோலி, ருத்ரபிரயாக், உத்தரக்காசி பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி-யமுனோத்ரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.