CM MK Stalin Press Meet: நீட் விலக்கு! டெல்லி பள்ளிகளுக்கு விசிட் ப்ளான்! பிரதமர் சந்திப்பு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!!
இன்று காலை டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர்
துபாயில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் தமிழ்நாடு திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் அவரை தி.மு.க.வின் எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் வாசலுக்கே சென்று வரவேற்றனர். மேலும், தி.மு.க. எம்.பி.க்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
Live Now: முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் ப்ரஸ் மீட் https://t.co/qyISmjE0VJ
— ABP Nadu (@abpnadu) March 31, 2022
பிரதமரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தித்த முதலமைச்சர், ”உடனடியாக நேரம் ஒதுக்கி என்னை சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழகத்தின் முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினேன். நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா தொடர்பாக பிரதமர் மோடியிடமும், மத்திய அமைச்சர் அமித் ஷாவிடமும் அழுத்தமாக பதிவு செய்தேன். மேகதாது அணை விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார். டெல்லி முதல்வருடன் இணைந்து மருத்துவமனை, பள்ளிகளை நாளை பார்வையிட உள்ளேன். ” என அவர் தெரிவித்திருக்கிறார்.
#BREAKING | கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பிரதமர் உறுதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் https://t.co/wupaoCQKa2 | #MKStalin #NEET #NarendraModi #DMK #BJP pic.twitter.com/dy4vQhTTTQ
— ABP Nadu (@abpnadu) March 31, 2022
பிற முக்கியச் செய்திகள்:
இன்று முதல் இந்த ஒரு சில ஸ்மார்ட் போன்களில் whatsapp இயங்காது.. இதோ முழு பட்டியல்.!#WhatsApp https://t.co/iktNQHMmU5
— ABP Nadu (@abpnadu) March 31, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்