News LIVE Today | நீட் விலக்கு மசோதா: பிப்ரவரி 5-ம் தேதி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும், பிப்ரவரி 16-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் தொடங்க உள்ளது. இந்நிலையில், முதலில் தொடங்க இருக்கும் ஒரு நாள் போட்டிக்காக அகமதாபாத்திற்கு இந்திய அணி நேற்று சென்றது.
அகமதாபாத் சென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கேக்வாட் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்
நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று திருப்பி அனுப்பிய நிலையில், வரும் பிப்ரவரி 5-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா பாதிப்படைந்த தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தொற்று பரவுவது அரிது - புதிய ஆய்வு
கொரோனா பாதிப்படைந்த தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தொற்று பரவுவது அரிது - புதிய ஆய்வு. ஏனெனில் ரத்த ஓட்டத்தில் தொற்று பரவுவது அரிது.
தமிழர்களுக்காக குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு நன்றி : முதலமைச்சர் முக ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்காக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நன்றி என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், மதிப்பிற்குரிய ராகுல் காந்தி அவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தியும், சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் உங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
You have voiced the long-standing arguments of Tamils in the Parliament, which rest on the unique cultural and political roots that value Self Respect. (2/2)
— M.K.Stalin (@mkstalin) February 3, 2022
கொரோனா தொற்று : இந்தியாவில் ஒரே நாளில் 1008 பேர் உயிரிழப்பு
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 1008 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...
இந்தியாவில் நேற்று 1,61,386 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 1,72,433 ஆக அதிகரித்துள்ளது.