Subramanian Swamy tweet: “8 வருடத் தோல்வி.. பொருளாதார பின்னடைவை மோடி சமாளிப்பாரா?” - சுப்ரமணியன் சுவாமி கேள்வி
தொடர்ந்து பாஜக அரசை விமர்சித்து வரும் சுப்ரமணியின் சுவாமி, பிரதமர் மோடி குறித்து மற்றொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்
8 ஆண்டுக்கால ஆட்சியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை பிரதமர் மோடி அடையத் தவறிவிட்டதாக பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கும் அவர், “மோடியின் 8 ஆண்டுக்கால ஆட்ட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடையத் தவறிவிட்டார். அதற்கு பதிலாக, நாட்டின் வளர்ச்சி விகிதம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பு வலு இழந்திருக்கிறது. சீனாவில் என்ன நடக்கிறது, எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பற்றி மோடிக்கு எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் இருந்து மீண்டு வர வழி உள்ளது, ஆனால் எப்படி என்று மீண்டு வர வேண்டுமென்பது அவருக்கு தெரியுமா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சுப்ரமணியன் சுவாமி ட்வீட்:
In 8 years in office we see that Modi has failed to achieve targets of economic growth. On the contrary, growth rate has declined annually since 2016. National security has weakened hugely. Modi inexplicably is clueless about China. There is scope to recover but does he know how?
— Subramanian Swamy (@Swamy39) April 19, 2022
தொடர்ந்து பாஜக அரசை விமர்சித்து வரும் சுப்ரமணியின் சுவாமி, பிரதமர் மோடி பற்றி தெரிவித்திருக்கும் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு உட்பட மத்திய அரசின் செயல்பாடுகளை, சுப்ரமணியன் சுவாமி தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Ancient rishis have advised that knowledge should be parted to those who have shradhha to receive it.
— Subramanian Swamy (@Swamy39) April 19, 2022
கடந்த ஆண்டும், இதே போல ஒரு ட்வீட்டை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற முக்கியச் செய்திகள்:
🔴 Tamilnadu Assembly Live: தொழில்துறை மானியக்கோரிக்கை.. அனல் பறக்கும் விவாதம் https://t.co/HkhPzgSW1Z
— ABP Nadu (@abpnadu) April 19, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்