இலங்கை பொருளாதார நெருக்கடி: சென்னை, திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்
இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாட்டில் தரை, கடல், விமானம் என போக்குவரத்துத் துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி கடந்த சில மாதங்களாக இலங்கை தத்தளித்து வரும் நிலையில், அந்நாட்டில் விலைவாசி உயர்வு, கடன் சுமை அதிகரிப்பு, ஆட்சி மாற்றம் என இலங்கை மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
சென்னை, திருவனந்தபுரத்தில் இலங்கை விமானங்கள்
குறிப்பாக, இலங்கையின் பண்டாநாயக் சர்வதேச விமான நிலையத்தில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், இலங்கையிலிருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு சென்னை, திருவனந்தபுரம் விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Long-haul flights from Sri Lanka, which is grappling with fuel shortage, have been making a pitstop at the Thiruvananthapuram International Airport in Kerala for refuelling.
— Adv K Shreekanth (@AdvkShreekanth) May 30, 2022
People who blame Indian eco system can feel how difficult to live in neighbouring countries...! pic.twitter.com/R1Rk9iirj4
இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாட்டில் தரை, கடல், விமானம் என போக்குவரத்துத் துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் இலங்கையிலிருந்து நீண்ட தூரம் சென்று வரும் சர்வதேச விமானங்களுக்கு இவ்வாறு எரிபொருள் நிரப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anywhere but here – Sri Lanka tells airlines to fill up elsewhere
— Tamil Guardian (@TamilGuardian) May 30, 2022
Sri Lanka’s Civil Aviation Authority has told airlines coming to the island to either ensure all flights arrive with the required fuel they need to leave or fill up elsewhere.
Read more ⬇️https://t.co/ZDNyVlJstD pic.twitter.com/Ne1XBuGsuF
அதிகரிக்குமா வருவாய்?
இவ்வாறு நீண்ட தூரம் இயக்கப்படும் விமானங்களுக்கு ஒரே நேரத்தில் 100 டன்களுக்கு அதிகமான எரிபொருள் நிரப்பபடும் நிலையில், இந்தியாவில், மத்திய மாநில அரசுகளின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்