மேலும் அறிய

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? எதிர்பார்ப்பை கிளப்பிய இலங்கை அதிபரின் இந்திய பயணம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் அவர்கள் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.

இலங்கை அதிபரின் இந்திய பயணம்:

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுகளில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் சம்பந்தமாக இந்திய தரப்புக்கு எடுத்துரைக்கவுள்ளார்.

இலங்கை - இந்திய மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கீகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது. இது சம்பந்தமாகவும், இந்நிகழ்வில் இந்திய பிரதிநிதி பங்கேற்பதற்கான அழைப்பும் ஜீவன் தொண்டமானால் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அத்துடன், இந்தியாவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டம், மலையக பல்கலைக்கழக விவகாரம், மலையக மாணவர்களுக்கான நிதியுதவி அதிகரித்துக்கொள்ளல் உள்ளிட்ட விவகாரங்கள் சம்பந்தமாகவும் இந்திய தரப்புடன் கலந்துரையாடுவதற்கு ஜீவன் தொண்டமான் ஈடுபட்டுள்ளார். அவர் பிரத்தியேக சந்திப்புகளிலும் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேவேளை, பெரும் பிரச்னையாக உள்ள இலங்கை - இந்திய மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது சம்பந்தமாகவும் இலங்கை, இந்திய தரப்புகள் பேச்சு நடத்தவுள்ளன. மீனவர் பிரச்னை சம்பந்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Embed widget