மேலும் அறிய

ஆளுங்கட்சியினர் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்ற சோனியா காந்தி.. குறுக்கிட்ட ஸ்மிருதி இரானி.. நாடாளுமன்றத்தில் பரபரப்பு

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருப்பது நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருப்பது நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நாடாளுமன்றத்தில் விவாத பொருளாக மாற, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாஜக எம்பி ஒருவருடன் பேசுவதற்காக ஆளும் கட்சியினர் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்றார்.

அப்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலையிட்டபோது, ​​சோனியா காந்தி தன்னுடன் பேச வேண்டாம் என அவரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன. சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்ட பிறகு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த இடைவேளையின்போதுதான் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. "சோனியா காந்தி மன்னிப்பு கேள்" என்று ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்ப, ​​ஆளும் பாஜக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடியே கோஷம் எழுப்பினர்.

அப்போது பேசிய ஸ்மிருதி இரானி, "நீங்கள் திரௌபதி முர்முவை அவமானப்படுத்த அனுமதித்தீர்கள். மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருக்கும் பெண்ணை அவமானப்படுத்துவதற்கு சோனியா அனுமதி அளித்திருக்கிறார்" எனக் கூறியுள்ளார்.

பின்னர், மக்களவை சபாநாயகர் அவையை ஒத்திவைத்ததை அடுத்து, சோனியா காந்தி அவையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, ​​கோஷம் எழுப்பிய பாஜக எம்பிக்களுடன் பேச அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்றார். அவருடன் இரண்டு காங்கிரஸ் எம்பிக்கள் சென்றனர்.

யாரும் எதிர்பாராத சூழலில், ஆளும் கட்சி அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று பாஜக எம்பி ரமா தேவியிடம், "ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்புக் கேட்டுவிட்டார். நான் ஏன் இதில் இழுக்கப்படுகிறேன்?" என கேட்டுள்ளார்.

அப்போது, குறுக்கிட்ட ஸ்மிருதி இரானி, "மேடம், நான் உங்களுக்கு உதவலாமா? நான்தான் உங்களின் பெயரை குறிப்பிட்டேன்" எனக் கூறியுள்ளார். அதற்கு சோனியா காந்தி, "என்னுடன் பேச வேண்டாம்" என்று பதிலளித்தார்.

இப்படி பரபரப்பான சூழ்நிலையில், பாஜகவினர் அமளியில் ஈடுபட, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்ப தொடங்கினர். திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலேவும் சோனியா காந்தியை கூச்சலிட்ட பாஜக உறுப்பினர்களிடம் இருந்து இழுத்து சென்றனர். பின்னர், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிலைமையை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதனிடையே, சோனியா காந்தியை ஸ்மிருதி இரானி தாக்கியதாக காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
America Vs Canada: எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
America Vs Canada: எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
JK Encounter: அடக்கொடுமையே..! 4 காவலர்கள் சுட்டுக்கொலை, வெடித்த என்கவுன்டர் - நடந்தது என்ன?
JK Encounter: அடக்கொடுமையே..! 4 காவலர்கள் சுட்டுக்கொலை, வெடித்த என்கவுன்டர் - நடந்தது என்ன?
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.