SECI Bars Reliance Power: ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு தடை - அம்பானிக்கு பேரிடி, காரணம் என்ன?
SECI Bars Anil Ambani: அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு தடைவிதித்து சோலார் எனர்ஜி கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (SECI) உத்தரவிட்டுள்ளது.
SECI Bars Anil Ambani: போலி டெண்டர் ஆவணம் காரணமாக, அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு தடை:
ரிலையன்ஸ் பவரிர் நிறுவனத்தின் பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், எனர்ஜி கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனில் அம்பானி நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் என்யு பெஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அரசு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட டெண்டர்களில் பங்கேற்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. SECI ஆல் வெளியிடப்பட்ட டெண்டரில் அனில் அம்பானி நிறுவனங்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததன் விளைவாக இந்த தடை உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
மோசடி அம்பலம்:
கடந்த ஜூன் மாதம் 1000 MW/2000 MWh நிலையான BESS திட்டங்களை அமைப்பதற்கான ஏலத்தை கோரியது, அதில் போலி ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து டெண்டர் நடைமுறையே ரத்து செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரிலையன்ஸ் NU BESS லிமிடெட் என அழைக்கப்படும் மகாராஷ்டிரா எனர்ஜி ஜெனரேஷன் லிமிடெட் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, வெளிநாட்டு வங்கியினால் வழங்கப்பட்ட தீவிர பண வைப்புத்தொகைக்கான வங்கி உத்தரவாதத்தின் ஒப்புதல் போலியானது என்று கண்டறியப்பட்டது என SECI தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் பவர் தரப்பு விளக்கம்:
SECI இன் நடவடிக்கையை "அவசியமற்ற நடவடிக்கை" என்று விவரித்த ரிலையன்ஸ் பவர், தடையை எதிர்த்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி, “இது தொடர்பான குற்றவியல் புகார் ஏற்கனவே டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவில் அக்டோபர் 16, 2024 அன்று மூன்றாம் தரப்பினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் உரிய செயல்முறை பின்பற்றப்படும். நிறுவனம் தனது 40 லட்சத்திற்கும் அதிகமான பங்குதாரர்களின் நலன் கருதி SECI இன் தேவையற்ற நடவடிக்கையை சவால் செய்ய அனைத்து தகுந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும்,” என்று ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் "நம்பிக்கையுடன்" செயல்பட்டதாகவும், மோசடி, போலி மற்றும் ஏமாற்று சதிக்கு பலியாகிவிட்டதாகவும் கூறியுள்ளது.
சோலார் எனர்ஜி கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா
சூரிய ஆற்றல், காற்று மற்றும் கலப்பின திட்டங்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு டெண்டர்களை வழங்கும் SECI, நடப்பு நிதியாண்டில் 20 GW திட்டங்களை டெண்டர் செய்ய எதிர்பார்க்கிறது. FY28 வரை ஒவ்வொரு ஆண்டும். 50 GW பசுமை ஆற்றல் திறனை டெண்டர் செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ரிலையன்ஸ் பவர் நிலக்கரி, எரிவாயு, நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் 5,300 மெகாவாட்களின் ஆணையிடப்பட்ட போர்ட்ஃபோலியோவுடன் சொத்துக்களைக் கொண்டுள்ளது.
நவம்பர் 6 ஆம் தேதி, ரிலையன்ஸ் பவரின் துணை நிறுவனமான ரோசா பவர் சப்ளை கம்பெனி லிமிடெட், சிங்கப்பூரைச் சேர்ந்த வர்டே பார்ட்னர்ஸ் நிறுவனத்திற்கு 485 கோடி கடனை முன்கூட்டியே செலுத்தி , பூஜ்ஜிய கடன் நிலையை அடைவதாக அறிவித்தது. முன்னதாக செப்டம்பரில், ரோசா பவர் ரூ. 833 கோடி கடனை வார்டே பார்ட்னர் நிறுவனத்திற்கு முன்கூட்டியே செலுத்தியதாக கூறப்பட்டது.