BJP MLA On Cannabis : ”மதுவுக்கு நோ சொல்லிட்டு, கஞ்சாவுக்கு ஓகே சொல்லுங்க..” : சொல்கிறார் இந்த பாஜக எம்.எல்.ஏ..
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் நடக்க மதுபானம் தான் காரணம், எனவே..
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் நடக்க மதுபானம்தான் காரணம், எனவே மதுபானத்தினை தடை செய்ய வேண்டும் எனவும், கஞ்சா பயன்படுத்தினால் குற்றங்கள் நடக்காது என பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தினைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி என்பவர் சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்க முக்கிய காரணம் மதுபானம் பயன்படுத்துவது தான். எனவே, மதுவை தடை செய்து கஞ்சாவை பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது, கஞ்சா பயன்படுத்தினால் கொலை, கொள்ளை மற்றூம் பாலியல் வன்கொடுமைகள் நடக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சையான கருத்துக்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்ப, பாஜக எம்.எல்.ஏ தனது தரப்பில் இருந்து விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவாது, ’நான் ஏற்கனவே இது குறித்து சட்டப்பேரவையில் பேசியிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இன்றைய காலத்தில் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க, மதுபானத்தினை தடை செய்து, கஞ்சா மற்றும் கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்படும் பாங்கு போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதால் குற்றங்கள் குறையும்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்சையான கருத்துக்கு சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர், பூபேஷ் பாகேல் கூறியிருப்பதாவது, எந்தவகையில் போதைக்கு அடிமையானாலும், அது தவிர்க்கப்பட வேண்டியது தான். ஆனால் பாஜக எம்.எல்.ஏ பேசுவதை ஏற்றுகொள்ள முடியாது. தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கும்படியான கோரிக்கையினை மத்திய அரசிடம் வைத்து அனுமதி பெற்று தரட்டும் என கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மாநில அரசுகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும் போதைக்கு அடிமையானவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளையும், பயிற்சி வகுப்புகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் கஞ்சாவை அனுமதிக்கச் சொன்ன பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி பிந்தியின் கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
”புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும், புகைப்பிடிப்பது உயிரைக் கொல்லும்
மது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு” என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்