மேலும் அறிய

Sikkim Flood: மழையால் சின்னாபின்னமான சிக்கிம்; சடலமாக கிடந்த 7 ராணுவ வீரர்கள் - 56 பேர் உயிரிழந்த சோகம்!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sikkim Flood: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிமில் கனமழை:

சிக்கிம் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து, லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளது. மேலும், மரங்கள், 1,200க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதோடு, 14 பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. சிக்கிமின் சுங்தாங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

மற்ற பகுதிகளைக் காட்டிலும் 80 சதவீதம் சுங்தாங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீஸ்டா நதி பாயும் வடக்கு வங்கத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மங்கன், கேங்டாக், பாக்யோங் மற்றும் நாம்ச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அக்டோபர் 8ஆம் தேதி மூடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

56 பேர் உயிரிழப்பு:

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 40 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, இன்று 56ஆக உயர்ந்துள்ளது.  இதில் 7 ராணுவ வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  சிக்கிமில் இருந்து இதுவரை 26 உடல்களும், மேற்கு வங்கத்தில் உள்ள டீஸ்டா நதிப் படுகையில் 30 உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கடும் வெள்ளப்பெருக்கால் 25 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், 142 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களில், பாக்யோங்கில் 59 பேரும், காங்டாக்கில் 22 பேரும், மங்கனில் 17 பேரும், நாம்ச்சியில் 5 பேரும் காணாமல் போயுள்ளனர். சிக்கிமில் இருந்த நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டார் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.  லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் இதுவரை 1,471 சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளனர். மேலும், 22,034 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி 2,413 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நிவாரணம் அறிவிப்பு:

வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் 30 பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை  6,875 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவட்டங்களில் சுமார் 26 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகிறது. 

இதற்கிடையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் பிரேம்சிங் ஆறுதல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.  முகாம்களில் தஞ்சம் அடைந்த அனைவருக்கும் தலா 2,000 ரூபாய் உடனடி நிவாரணமாக அறிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget