'புற்றுநோய் குணமாகும்’ - கங்கை நதிநீரில் மூழ்க வைத்த பெற்றோர் - பறிபோன சிறுவனின் உயிர்!
கங்கையில் நீராடினால் தங்கள் மகன் புற்றுநோயில் இருந்து குணமடைவான் என்று பெற்றோர் நம்பியுள்ளனர்.
கங்கையில் நீராடினால் தங்கள் மகன் புற்றுநோயில் இருந்து குணமடைவான் என்று பெற்றோர் நம்பியுள்ளனர். இதனை அடுத்து, சிறுவனை 5 நிமிடங்களுக்கு கங்கை நதிநீரில் பெற்றோர் மூழ்க வைத்துள்ளனர். இதனால் மூச்சு திணறிய 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
5 வயது சிறுவன் உயிரிழப்பு:
டெல்லியைச் சேர்ந்த 5 வயது சிறுவனின் குடும்பம் நேற்று காலை 9 மணிக்கு ஹரித்வாருக்கு புறப்பட்டனர். தனது 5 வயது குழந்தையுடன் பெற்றோர் மற்றும் அவரின் உறவினர் ஒருவர் வந்துள்ளார். 5 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனை அடுத்து, ஹரித்வாருக்கு 5 வயது மகனை அழைத்து கொண்டு வந்துள்ளனர். இவர்கள் கங்கையில் புனித நீராடினால் அதிசயம் நிகழும் என்ற நம்பிக்கையில் நோயுற்ற சிறுவனை திரும்பத் திரும்ப கங்கை நதியில் மூழ்கச் செய்துள்ளனர். இதனால், சிறுவன் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கங்கையில் நீராடினால் தங்கள் மகன், புற்றுநோயில் இருந்து குணமடைவான் என நம்பி, பெற்றோர் செய்த செயலால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ வைரல்:
ब्लड कैंसर पीड़ित बच्चे को गंगा में डुबोकर मार डाला-
— Sachin Gupta (@SachinGuptaUP) January 24, 2024
दर्दनाक वीडियो हरिद्वार में हरकी पैड़ी का है। लाइलाज घोषित हुए बच्चे को परिजन हरिद्वार ले गए। आरोप है कि बच्चे को उन्होंने कई मिनट तक पानी में डुबोए रखा। पिता राजकुमार सैनी, मां शांति, मौसी सुधा पुलिस कस्टडी में हैं। pic.twitter.com/twu9tkTFAF
இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில், குழந்தையின் உடலுடன் பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். குழந்தையை சுற்றி மூன்று பேர் இருந்துள்ளனர். அங்கிருந்த ஒரு பெண், 5 வயது சிறுவனை நீரில் மூழ்கடித்தார். சுமார் 5 நிமிடங்கள் சிறுவனை மூழ்கடித்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த சில நபர்கள் இந்த பெண்ணை கண்டித்துள்ளனர். அதை கேட்காமல், ”இந்த குழந்தை இப்போது எழுந்து நிற்கும். இது என்னுடைய வாக்குறுதி" என்று அந்த பெண் கூறுகிறார்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "சிறுவனின் பெற்றோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்களை மகனை கங்கையில் புனித நீராடச் செய்வதற்காக அழைத்து வந்துள்ளனனர். சிறுவனின் நோய் பற்றி மருத்துவரிடம் கேட்டுள்ளனனர். ஆனால், மருத்தவர்கள் குழந்தையை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனால், கங்கையில் நீராடினால் சிறுவனுக்கு புற்றுநோய் குணமாகும் என்று கண்மூடித்தனமான நம்பிகையால் இங்கு அழைத்து வந்துள்ளனர். அந்த குடும்பம் சிறுவனை நீரில் மூழ்கடித்துள்ளது" என்றார்.