KYV கட்டாயம்: FASTag பயனர்களுக்கு அதிர்ச்சி! உங்கள் வாகனத்தை சரிபார்க்க தவறினால் என்ன நடக்கும்? முழு தகவல்!
வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கும் KYV (Know Your Vehicle) நடைமுறையைக் கட்டாயமாகச் செய்ய வேண்டியுள்ளது.
ஒவ்வொருவருக்கும் KYC (Know Your Customer) - எப்படி அவசியமோ, அதைப் போல இப்போது வாகனங்களுக்கு KYV (Know Your Vehicle) (உங்கள் வாகனத்தை அறிக) என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கும் KYV (Know Your Vehicle) நடைமுறையைக் கட்டாயமாகச் செய்ய வேண்டியுள்ளது.
FASTag-ஐ அப்டேட் செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறை, பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். FASTag-களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், ஒரு கார்டு ஒரு வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இணைந்து KYV (Know Your Vehicle) எனப்படும் இந்த செயல்முறையைக் கட்டாயமாக்கியுள்ளன.
கார் FASTag-களை அதிக சுமை கொண்ட லாரிகளில் பயன்படுத்துவது, window sheildeல் ஒட்டாமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பயன்படுத்துவது போன்ற முறைகேடுகளைத் தடுக்கவே KYV கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைவான கட்டணம் செலுத்தி அதிக பாரம் கொண்ட வாகனங்கள் செல்வது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் செயல்முறை அக்டோபர் 31, 2024 முதல் கட்டாயமாக்கப்பட்டது. இது ஒருமுறை மட்டும் செய்ய வேண்டிய செயல்முறை அல்ல. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் இந்தச் சரிபார்ப்பு மீண்டும் செய்யப்பட வேண்டும்.
அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் multi-லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) சுங்கச்சாவடி முறையை, வாகனங்கள் நிற்காமல் அல்லது வேகம் குறைக்காமல் கடந்து செல்லும் முறை, செயல்படுத்த அரசு இலக்கு வைத்துள்ளது. அதற்குத் தயாராகும் வகையில், ஒரு வாகனம் - ஒரு டேக் என்பது மிகவும் முக்கியம் என அதிகாரிகள் கூறுகின்றனர். NPCI வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, அனைத்து FASTag-களும் KYV விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த நடைமுறையின் முக்கிய நோக்கம், FASTag ஆனது வாகனப் பதிவு எண் (VRN) மற்றும் சேஸ் எண்ணுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்வதாகும்.வாகனப் பதிவுச் சான்றிதழை (RC) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வாகனத்தின் முன் பக்கப் படம் (FASTag மற்றும் பதிவு எண் தெளிவாகத் தெரியும் வகையில்) எடுக்க வேண்டும். வாகனத்தின் பக்கவாட்டுப் படம் (சைடு இமேஜ் - டேக் மற்றும் வாகனத்தின் அச்சுப்பகுதிகள் தெரியும்படி) எடுக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் புகைப்படங்களும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். FASTag வழங்கிய வங்கிகள் இந்தத் தகவல்களை வாகன் (VAHAN) தரவுத்தளம் மற்றும் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுடன் சரிபார்க்க வேண்டும். சரியான KYV இல்லாத FASTag-கள் தானாகவே செயலிழக்கப்படும் என கூறப்படுகிறது.





















