மேலும் அறிய

Karnataka: கர்நாடகா தேர்தலில் சீட் மறுப்பு.. அதிருப்தி பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில்  திடீர் திருப்பமாக  ஷிவமோக்கா மாவட்டத்தில்  பாஜவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்

கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு 2023 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் மே 10 ஆம் தேதி நடக்கவுள்ளது. தென்னிந்தியாவில் 224  தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சி செய்து வருகிறது.  மேலும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் முடிவில் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் எப்படியாவது அங்கு மீண்டும் வெற்றி பெற ஆளுங்கட்சியான பா.ஜ.க. முழு முயற்சியோடு களமிறங்கியுள்ளது. 

அதேசமயம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் , முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்  ஆகிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழ தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கிடையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விலகிய ஈஸ்வரப்பா

இதனிடையே நேற்றைய தினம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு  கர்நாடக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் “உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுகிறேன். ஆக, எந்த தொகுதிக்கும் என்னுடைய பெயரை பரீசிலிக்க வேண்டாம். எனக்கு மாநில தலைவராக, அமைச்சராக, துணை முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பாஜகவுக்கு நன்றி” என தெரிவித்திருந்தார்.  

இது பாஜக மேலிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் கர்நாடகாவை பொறுத்தவரை இதுவரை பாஜக தனி பெரும்பான்மையுடன் இங்கு ஆட்சி அமைக்கவில்லை. எனவே வரும் தேர்தலில் பெருவாரியான வெற்றிப் பெற ஆட்சி அமைக்க பாடுபடுவேன் எனவும் ஈஸ்வரப்பா தெரிவித்திருந்தார்.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

இதற்கிடையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும்  189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் 52 பேர் புதிதாக களம் காண்கின்றனர். இதில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பாரம்பரியமிக்க ஷிக்கான் தொகுதியில் போட்டியிடுகிறார்.முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக நிர்வாகிகள் ராஜினாமா

இதனிடையே கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், பாஜக  சீட் வழங்கப்படவில்லை என மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் ஈஸ்வரப்பாவுக்கு ஆதரவாக ஷிவமோக்காவில் உள்ள பாஜகவைச் சேர்ந்த மேயர் மற்றும் துணைமேயர் உட்பட 19 மாநகராட்சி உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் லட்சுமண் சவாடி பாஜகவில் இருந்து விலகினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Modi in Tamil Nadu : இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
Mumbai Mayor: நாட்டின் பணக்கார மாநகராட்சி.. மேயராகப்போகும் அந்த பெண்மணி யார்? தேஜஸ்வி கோசல்கர்?
Mumbai Mayor: நாட்டின் பணக்கார மாநகராட்சி.. மேயராகப்போகும் அந்த பெண்மணி யார்? தேஜஸ்வி கோசல்கர்?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi in Tamil Nadu : இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
Mumbai Mayor: நாட்டின் பணக்கார மாநகராட்சி.. மேயராகப்போகும் அந்த பெண்மணி யார்? தேஜஸ்வி கோசல்கர்?
Mumbai Mayor: நாட்டின் பணக்கார மாநகராட்சி.. மேயராகப்போகும் அந்த பெண்மணி யார்? தேஜஸ்வி கோசல்கர்?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Ration Card Special Camp : ஒரு மணி நேரத்தில் ரேஷன் கார்டு... மிஸ் பண்ணாதீங்க- நாளை சூப்பர் சான்ஸ்.! அரசு அசத்தல் அறிவிப்பு
ஒரு மணி நேரத்தில் ரேஷன் கார்டு... மிஸ் பண்ணாதீங்க- நாளை சூப்பர் சான்ஸ்.! அரசு அசத்தல் அறிவிப்பு
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு வந்தாச்சு..
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு வந்தாச்சு..
Embed widget