மேலும் அறிய

SBI On 2000 Rs Note:2000 ரூபாய் நோட்டை மாற்ற ஆவணம் தேவையா..? எஸ்.பி.ஐ. சொல்வது என்ன?

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளுடன், எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்பிஐ வங்கி விளக்கமளித்துள்ளது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளுடன், எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்பிஐ வங்கி விளக்கமளித்துள்ளது. அதன்படி, 20 ஆயிரம் ரூபாய் வரையில் எந்தவித ஆவணங்களும் இன்றி, பயனாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி அறிவிப்பு:

எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ”2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்தவித சான்றையும் சமர்பிக்க தேவையில்லை. பணம் மாற்ற எந்தவித படிவமோ, அடையாள ஆவணமோ பொதுமக்கள் தர வேண்டியதில்லை. மக்களுக்கு எந்தவித  இடையூறும் இன்றி  நோட்டுகளை மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும்” வங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-க்குள் மக்கள் மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில், எஸ்பிஐ வங்கி இந்த விளக்கமளித்துள்ளது. 

”2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது”

நாடு முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.  

பணத்தை எப்படி மாற்றுவது?

2000 ரூபாய் நோட்டை வேறு நோட்டுகளாக மாற்றுவதில், தொடக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மே 23, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டை மற்ற பணத்துடன் மாற்றிக்கொள்ளலாம். இந்த நோட்டுகளை மாற்ற 20 ஆயிரம் ரூபாய் வரை வரம்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருவர், ஒரு நாளைக்கு, 10 நோட்டுகள் வரை மாற்றிக்கொள்ளலாம்.

வங்கிகள் மறுத்தால் புகார் அளிக்கலாம்

வங்கிக் கிளையோ அல்லது வேறு எந்த நிறுவனமோ 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ள மறுக்கும் சூழ்நிலையை யாராவது சந்தித்தால், புகாரின் பெயரில் அதற்கான தகுந்த வழி கிடைக்கும். இதுபோன்ற சம்பவம் நடந்தால் தனிநபர்கள் அந்தந்த வங்கிகளுக்குச் சென்று புகார் அளிக்கலாம். செப்டம்பர் 30, 2023க்கு முன் இதைச் செய்வது முக்கியம். 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கியின் பதிலில் புகார்தாரர் அதிருப்தி அடைந்தாலோ, RBI போர்ட்டல் cms.rbi.org.in இல் புகாரைப் பதிவுசெய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. 

2000 ரூபாய் நோட்டு கடந்து வந்த பாதை 

2000 ரூபாய் நோட்டுகள் முதன்முதலில் 2016 நவம்பர் 8 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த ரூபாய் நோட்டு பொதுமக்களிடையே பரவலாக காணப்பட்டாலும், நாளடைவில் இதன் புழக்கம் வெகுவாக குறைந்தது. ஒரு கட்டத்தில் ஏடிஎம்களில் கூட இந்த ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான், 2000 ரூபாய் நோட்டு மொத்தமாக திரும்பப் பெறபட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
Embed widget