Satellite Toll System: ஃபாஸ்டேக் முறைக்கு பை, பை..! செயற்கைக்கோள் மூலம் சுங்க கட்டணம் வசூல் - எப்படி? விவரம் இதோ..!
Satellite Toll System: சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, செயற்கைக் கோள் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை இந்தியாவில் விரைவில் அமலுக்கு வர உள்ளது.
Satellite Toll System: தற்போதுள்ள ஃபாஸ்டேக் முறையானது, புதிய குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் மூலம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறை:
சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தற்போதுள்ள ஃபாஸ்டேக் நடைமுறைக்கு பதிலாக, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலிப்பு முறை செயல்படுத்தப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. நாட்கள் உருண்டோடிய நிலையில், ஃபாஸ்டேக் முறையை கைவிட்டு, புதிய நடைமுறையில் கட்டணம் செலுத்துவதற்கான நேரம் நெருங்கி வந்துள்ளது. அதன்படி, செயற்கைக் கோள் அடிப்படையிலான கட்டண வசூலிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான விருப்பத்தை தெரிவிக்குமாறு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பல்வேறு உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் நடைமுறைக்கு வரவுள்ள புதிய குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டமானது, இந்திய சுங்கச் சாவடிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.
ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பு அமைப்பு: எப்படி வேலை செய்கிறது?
இந்தியாவின் வரவிருக்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் வசூல் அமைப்பு, தற்போதைய ஃபாஸ்டேக் அமைப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்த உள்ளது. ஆனால் இந்த புதிய முறையில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்டேக் ஐடிகளை ஸ்கேன் செய்வதற்கு பதிலாக வாகனத்தின் நம்பர் பிளேட் ஸ்கேன் செய்யப்படும். வாகனம் இயக்கத்தில் இருக்கும் போதே நம்பர் பிளேட்களை அடையாளம் காணக்கூடிய கேமராக்களைப் பயன்படுத்தும் மெய்நிகர் கங்கச்சாவடிகள் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட உள்ளன. பயணித்ததூரத்தின் அடிப்படையில் வங்கிக் கணக்கியிருந்து தானாகவே கட்டணத் தொகையைக் கழிப்பதற்காக, வாகனத்தைக் குறிப்பதற்கும் அதன் பல்வேறு விவரங்களைக் கண்காணிப்பதற்கும் ஜிபிஎஸ் க்கொ-ஆர்டினேட்ஸ்களை பயன்படுத்தும்
ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பின் நன்மைகள்:
புதிய சுங்கக் கட்டண வசூலிப்பு முறையானது, காத்திருப்பு நேரத்தை குறைத்து, பணியை திறம்படச் செய்வதை நோக்கமாகக் கொண்டு அமல்படுத்த உள்ளது. இது ஒரு வாகனத்திற்கான சராசரி காத்திருப்பு நேரந்தை 714 வினாடிகளில் இருந்து 47 வினாடிகளாகக் குறைக்கும். அதாவது பயண நேரத்தைக் குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவுகிறது. சிறப்பு கட்ணச்சாவடிகளை அமைக்க வேண்டிய அவசியமின்றி வாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதிப்படுத்தவும் உதவும். இதனுடன் சுங்கச்சாவடிகளை அகற்றுவது சுங்கச்சாவடிகளின் பராமரிப்பு மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான முயற்சிகள் மற்றும் செலவுகள் மிச்சமாகும். பயணிகள் தாங்கள் பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே பணம் செலுத்துவார்கள் என்பதால், பில்லிங் செயல்முறை எளிதாகிவிடும்
ஜிபிஎஸ் டோல் சேகரிப்பு அமைப்புடன் தொடர்புடைய சவால்கள்:
தற்போது பயன்படுத்தப்படும் FasTAG உடன் ஒப்பிடும்போது புதிய நடைமுறை மிகவும் மேம்பட்டதாக இருந்தாலும், அது தொடர்புடைய சில சிக்கல்களும் உள்ளன. அவற்றிற்கு தீர்வு காணப்பட ண்டும். எடுத்துக்காட்டாக ஒழுங்கற்ற சிக்னல்கள் உள்ள இடங்களில் புதிய அமைப்பால் துல்லியமான தரவைக் குவிக்க முடியாமல் போகலாம் . இந்தப் பிரச்சனைகள் கிராமப்புறங்களில் அல்லது புவியியல் ரீதியாக சவாலான நிலப்பரப்பு உள்ள பகுதிகளில் தொடரலாம். கூடுதலாக, இத்தகைய அமைப்பின் பயன்பாடு பயனர்களுக்கு தனியுரிமை கவலைகளை எழுப்புகிறது
ஜிபிஎஸ் கட்டண வசூல் முறையைப் பயன்படுத்தும் நாடுகள்:
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஏற்கனவே ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூலிப்பு முறையை ஏற்றுக்கொண்டுள்ளன. அதன்படி, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற ஐரோப்பாவில் உள்ள நாடுகள் தங்கள் நெடுஞ்சாலைகளில் பயணத்தை எளிதாக்க இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.