மேலும் அறிய

Narendra Modi: மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன்.. நார்வே பேப்பருக்கு குவியும் கண்டனம்!

ஆஃப்டன்போஸ்டன் இதழில் வெளியான அந்த கேலிச்சித்திரத்தில் அவர் மகுடி வாசிப்பவராக இருக்க, பாம்பு இருக்கும் இடத்தில் எரிபொருள் நிலையக் குழாய் போலத் தோற்றமளிக்கும் ஒன்று இருப்பது போலவும் வரையப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை பாம்பு பிடிப்பவராக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்ட நார்வே நாட்டின் செய்தித்தாள் ஒன்று கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் ஐரோப்பிய நாடான நார்வேக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது தலைநகர் ஓஸ்லோவில்  பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நார்வே பிரதமர் ஜோனாஸ் உடன், பிரதமர் மோடியும் பங்கேற்றிருந்தார். அப்போது  பிரதமர் மோடியிடம் ஒரு பெண் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பெண் நிருபர் ஹெல்லே லிங் இதுதொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். 

இது மிகப்பெரிய அளவில் வைரலானது. பலரும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் அந்த பெண் நிருபரை வெளிநாட்டு உளவாளி எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இப்படியான நிலையில்   பிரதமர் நரேந்திர மோடியைப் பாம்பாட்டியாகச் சித்தரிக்கும் இனவெறி கேலிச்சித்திரம் ஒன்றை நார்வே நாளிதழ ஒன்று வெளியிட்டுள்ளது. இது மேற்கத்தியப் பழமைவாதக் கருத்துக்களை வலுப்படுத்துவதாக உள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஆஃப்டன்போஸ்டன் இதழில் வெளியான அந்த கேலிச்சித்திரத்தில் அவர் மகுடி வாசிப்பவராக இருக்க, பாம்பு இருக்கும் இடத்தில் எரிபொருள் நிலையக் குழாய் போலத் தோற்றமளிக்கும் ஒன்று இருப்பது போலவும் வரையப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு தந்திரமான மற்றும் சற்றே எரிச்சலூட்டும் மனிதன் என்ற கேப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனைப் பார்த்த இந்திய மக்கள் சம்பந்தப்பட்ட நாளிதழுக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கேலிச்சித்திரம் அப்பட்டமான இனவெறி கொண்டது எனவும், இந்தியாவிற்கும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கும் அவமரியாதையானதாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் முன்பு உலகம் இந்தியாவை 'பாம்பாட்டியர்களின் தேசம்' என்று நினைத்ததாக பிரதமர் மோடி பேசி வந்தார். ஆனால் இப்போது, ​​அவர் ஓஸ்லோ சென்றிருந்தபோது, ​​ஒரு முக்கிய ஐரோப்பிய செய்தித்தாள் அவரை அப்படியே சித்தரித்துள்ளது எனவும் ஒரு இணையவாசி தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில்  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான செய்திகளில் ஒரு ஸ்பெயின்  செய்தித்தாள் பாம்பாட்டி குறியீட்டைப் பயன்படுத்தியபோது , ​​இதேபோன்ற ஒரு எதிர்ப்பு எழுந்திருந்தது. 

இதனிடையே பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்காமல் சென்ற சர்ச்சைக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செயலாளர் சிபி ஜார்ஜ்,  அறியாமை கொண்ட இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் வெளியிடப்படும் செய்திகளை படித்து விட்டு வந்து கேள்விகளை செய்தியாளர்கள் கேட்கிறார்கள். இந்தியாவைப் பற்றி மக்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதாகவும், அதில் மீறல்கள் ஏற்படும் சமயங்களில்  சட்டரீதியான தீர்வுகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget