Watch Video | கோட் சூட்.. பளபள ப்ளேஸர்.. தோனியும், சாக்ஷி தோனியும் கலக்கும் ஈவண்ட்..
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனியின் புதிய படத்தை அவருடைய மனைவி சாக்ஷி சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
![Watch Video | கோட் சூட்.. பளபள ப்ளேஸர்.. தோனியும், சாக்ஷி தோனியும் கலக்கும் ஈவண்ட்.. Sakshi singh Rawat posts image of Dhoni and herself attending marriage function in Jaipur and it goes viral in Instagram Watch Video | கோட் சூட்.. பளபள ப்ளேஸர்.. தோனியும், சாக்ஷி தோனியும் கலக்கும் ஈவண்ட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/b8f473ee39a953a802f06982629ae557_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான விஷயம் என்றால் அது சமூக வலைதளங்களில் எப்போதும் வைரல்தான். அதிலும் குறிப்பாக அவர் தொடர்பான பதிவை அவருடைய மனைவி சாக்ஷி சிங் தோனி செய்தால் அந்தப் பதிவு மின்னல் வேகத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது அவருடைய மனைவி ஒரு படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி சிங் ராவத் ஆகிய இருவரும் ஒரு திருமணத்தில் பங்கேற்றுள்ள படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் படத்தில் தோனி சூப்பராக கோட் சூட் உடன் இருக்கிறார். அவருடைய மனைவி ஒரு லெஹெங்கா உடை அணிந்து இருக்கிறார். இவர்கள் இருவரும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற திருமண ஒன்றுக்கு சென்றுள்ளனர்.
View this post on Instagram
தற்போது இந்தப் படம் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இதே திருமண நிகழ்ச்சியில் தோனி மற்றும் அவருடைய மனைவி பங்கேற்றது தொடர்பாக ஒருவர் ட்விட்டர் பக்கத்திலும் ஒரு சிறிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவும் வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
#MahiSakshi ❤😍#MSDhoni @msdhoni & #SakshiDhoni @SaakshiSRawat With #PriiyanshuChopraa @PriyanshuChopra pic.twitter.com/J5Qj7BndXg
— K 👸 MSDian (@k_indiangirl7) December 19, 2021
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: திடீரென ஸ்பின்னராக மாறிய வேகப்பந்து வீச்சாளர்...ஆஷஸில் நிகழ்ந்த சுவாரஸ்யம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)