மேலும் அறிய

சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 12 பேருக்குப் பிறகு முன்னாள் டிடிபி தலைவர் கைது!

கடந்த 2023 முதல் 2025 வரை டிடிபி தலைவராக இருந்த பி.எஸ்.பிரசாந்த் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முன் காங்கிரஸில் இருந்தாா்.

சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (டிடிபி) முன்னாள் தலைவா் பி.எஸ்.பிரசாந்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி)  கைது செய்தனா். சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (டிடிபி) முன்னாள் தலைவா் பி.எஸ்.பிரசாந்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி)   நேற்று கைது செய்தனா்.

சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 12 பேருக்குப் பிறகு முன்னாள் டிடிபி தலைவர் கைது!

சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் கடந்த ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கனவே 12 பேரை எஸ்ஐடி கைது செய்துள்ளது. இந்நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு டிடிபி தலைவராக பிரசாந்த் இருந்தபோது, மின் முலாம் பூசிய பணிகள் தொடா்பாக விசாரித்து வருவதாகவும் கேரள உயா்நீதிமன்றத்தில் எஸ்ஐடி அண்மையில் தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து பிரசாந்தை காவலில் எடுத்து எஸ்ஐடி  விசாரித்தது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 2023 முதல் 2025 வரை டிடிபி தலைவராக இருந்த பி.எஸ்.பிரசாந்த் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முன் காங்கிரஸில் இருந்தாா். எஸ்ஐடி அதிகாரிகள் அழைத்துச் செல்லும் முன் பிரசாந்த் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதற்குப் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எஸ்ஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தங்கக் கவச முறைகேடு விவகாரத்தை வெளிக்கொண்டு வருவதில் நான் முக்கியப் பங்காற்றினேன். இவ்வாறு இருக்கையில் முறைகேட்டுக்கு துணைபோனவா்களைப் பாதுகாக்க எஸ்ஐடி அனுமதியின்றி கடந்த 2025-ஆம் ஆண்டில் பராமரிப்புக்காக துவார பாலகா் சிலைகளை எடுத்துச் சென்னதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ஆபரணங்களை பாதுகாக்கும் திருவாபரண ஆணையா், ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளின் முன்னிலையில், துவார பாலகா் சிலைகள் பராமரிப்புக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 12 பேருக்குப் பிறகு முன்னாள் டிடிபி தலைவர் கைது!

இந்த மொத்த நடைமுறைகளும் அதிகாரிகளின் மேற்பாா்வையில் விடியோ பதிவு செய்யப்பட்டது. பராமரிப்பு நிறைவடைந்து கோயில் தந்திரி, சிறப்பு ஆணையா் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் துவார பாலகா் சிலை கோயிலில் நிறுவப்பட்டது. அப்போது சிலையில் பூசப்பட்ட தங்கம் மற்றும் செம்பின் எடை முன்பைவிட அதிகமாக இருந்தது. இதனால் டிடிபிக்கு எந்தப் பொருளாதார இழப்பும் ஏற்படவில்லை. சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் முந்தைய இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணியும் டிடிபியும் எஸ்ஐடி விசாரணை கோரியது. ஆனால் டிடிபி தலைவராக இருந்த காரணத்துக்காக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பான எஸ்ஐடியின் விசாரணை வேகமாக நடைபெறவில்லை என தேவஸ்வம் அமைச்சா் முரளீதரண் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘எஸ்ஐடியின் விசாரணை வேகம் காங்கிரஸ் அரசுக்கு மகிழ்ச்சியாக இல்லை. இந்த விவகாரத்தில் சிலா் கைது செய்யப்பட்டிருந்தாலும் தற்போது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த மாத இறுதிக்குள் எஸ்ஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையென்றால் கேரள உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு அதிருப்தியை வெளிப்படுத்தும். டிடிபி முன்னாள் தலைவா் பிரசாந்திடம் எல்டிஎஃப் தலைமையிலான அரசே முதலில் விசாரணை மேற்கொண்டது. அதன் தொடா்ச்சியாகவே தற்போது அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய அரசு தலையிடவில்லை’ என்றாா்.

Advertisement

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget