Russia-Ukraine War : ரஷ்யா - உக்ரைன் போர்: எல்ஐசி பங்கு விற்பனை திட்டமிட்டபடி நடைபெறுமா..?
ரஷ்யா-உக்ரைன் தாக்குதலின் பின்னணியில் பங்குச் சந்தைகளில் ஏற்படும் முன்னேற்றங்களை பொறுத்து இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) ஆரம்ப பொதுப் பங்களிப்பை (ஐபிஓ) ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. எனவே எல்ஐசி ஐபிஓ ஏலத்தில் இணைவது மற்றும் எல்ஐசி பங்குகளின் பலன்களை நீங்கள் பெற வேண்டும் என்றால், ஒவ்வொரு பாலிசிதாரரும் தங்களது பான் விபரங்களை கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும்.
இல்லாவிடில் எந்த பலனையும் நீங்கள் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பான் கார்டினை எல்ஐசியில் பாலிசியுடன் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இதற்கு உங்களிடம் சரியான டிமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும். தற்போது 8 கோடி டிமேட் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் எல்ஐசியில் மட்டும் 25 கோடி பாலிசிதாரர்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் வசிப்பவர்கள் பாலிசிதாரர் முன்பதிவு பகுதியின் கீழ் இந்த சலுகையில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் மற்றும் தள்ளுபடியைப் பெறுவார்கள் எனத் தெரிவித்தது.
LIC IPO has been eagerly awaited. I think the way #LICIPO has been crafted has created a lot of interest. We are going ahead with LIC IPO: FM @nsitharaman pic.twitter.com/FwqBi0apD9
— All India Radio News (@airnewsalerts) February 22, 2022
இந்தநிலையில், ரஷ்யா-உக்ரைன் தாக்குதலின் பின்னணியில் பங்குச் சந்தைகளில் ஏற்படும் முன்னேற்றங்களை பொறுத்து இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) ஆரம்ப பொதுப் பங்களிப்பை (ஐபிஓ) ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஆனால், நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் ஐபிஓ விற்பனை மார்ச் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இப்போது வரை, எல்ஐசியின் பட்டியலை தாமதப்படுத்துவது பற்றி எந்த விவாதமும் நடைபெற்றதாக தெரியவில்லை.
மத்திய அரசு இதன்மூலம் 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை(870 கோடி டாலர்) திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்