Fake News: வேலையில்லாதவர்களுக்கு ரூ. 6 ஆயிரமா? யாரும் பகிராதீங்க - மத்திய அரசு விளக்கம்
வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசாங்கம் மாதத்திற்கு ரூ .6,000 வழங்குகிறது என பரவி வருவது போலி செய்தி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
![Fake News: வேலையில்லாதவர்களுக்கு ரூ. 6 ஆயிரமா? யாரும் பகிராதீங்க - மத்திய அரசு விளக்கம் Rupees 6,000 will be given to the unemployed that is fake news Don't anyone share says goverment via pib fact check Fake News: வேலையில்லாதவர்களுக்கு ரூ. 6 ஆயிரமா? யாரும் பகிராதீங்க - மத்திய அரசு விளக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/1723f084a3e67f4d97bdae1c306f09511671550755446571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
'பிரதான் மந்திரி பெரோஜ்காரி பட்டா யோஜனா' திட்டத்தின் கீழ் வேலையில்லாத இளைஞர்களுக்கு இந்திய அரசு மாதத்திற்கு ரூ .6,000 வழங்குவதாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இதையடுத்து, பலரும் அந்த தகவலை வாட்சப் உள்ளிட்ட செயலிகள் வழியாக பகிர்ந்து வந்தனர். இதை பார்த்த வேலையில்லாத இளைஞர்கள் பலரும், அதை எப்படி பெறுவது உள்ளிட்ட என்ற தகவலை தேட ஆரம்பித்தனர்.
இந்நிலையில், இந்த செய்தி மிகவும் வைரலனதை தொடர்ந்து மத்திய அரசின் கவனத்துக்கு சென்றது. தற்போது இந்த செய்தியானது போலியானது என பிஐபி செய்தி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அத்தகைய தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அது போன்ற திட்டம் தொடங்கப்படவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
एक वायरल #Whatsapp मैसेज में दावा किया जा रहा है कि प्रधानमंत्री बेरोजगारी भत्ता योजना के तहत सरकार बेरोजगार युवाओं को हर महीने ₹6,000 का भत्ता दे रही है। #PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) December 19, 2022
▶️यह मैसेज फर्जी है।
▶️भारत सरकार ऐसी कोई योजना नहीं चला रही।
▶️कृपया ऐसे मैसेज फॉरवर्ड ना करें। pic.twitter.com/XDUURi2ahH
இது போன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், மேலும் இது போன்ற பொய் தகவலை யாரும் பகிர வேண்டாம். மேலும் எந்த ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்னர், அது உண்மைதானா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)