Rules change from 1 June 2024: ஜுன் 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய விதிகள் - டிரைவிங் லைசென்ஸ் - கேஸ் சிலிண்டர் வரை
Rules change from 1 June 2024: வரும் ஜுன் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள, மிக முக்கியமான விதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Rules change from 1 June 2024: வரும் ஜுன் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள, சில அத்தியாவசியமான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஜுன் 1ல் அமலுக்கு வரும் புதிய விதிகள்:
புதிய மாதத்தின் தொடக்கத்தில், நம்மைச் சுற்றியுள்ள பல விதிகள் மாற உள்ளன. ஓட்டுநர் உரிமம் முதற்கொண்டு எரிவாயு சிலிண்டர் வரையில், புதிய விதிகள் புதிய மாதத்தின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த மாற்றங்கள் உங்களது மாதாந்திர பட்ஜெட்டிற்கு சாதகமாகவும் அமையலாம், பாதகமாகவும் அமையலாம். அதற்கேற்றாற்போல் உங்களை தயார்படுத்திக் கொள்ள, வரும் 1ம் தேதி முதல் நாட்டில் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றை அறிந்துகொண்டு அடுத்த மாதத்திற்கான உங்களது பட்ஜெட்டை தயார் செய்யலாம்.
எரிவாயு சிலிண்டர் விலை மாறலாம்:
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் ஒன்றாம் தேதியும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கருத்தில் கொண்டு எரிவாயு சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றன. திருத்தி அமைக்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளின் காலையில் வெளியிடப்படுகிறது. இம்முறையும் ஜூன் 1ம் தேதி புதிய எரிவாயு சிலிண்டர் விலை வெளியிடப்படும்.
அப்போது, 14 கிலோ எடையிலான வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் 19 கிலோ எடையிலான் வணிக சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யும்.
ஆதார் அட்டை புதுப்பிப்பு:
ஆதார் அட்டை புதுப்பித்தல் தொடர்பான தகவல்களை UIDAI அளித்துள்ளது. அதன்படி, ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான தேதி ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது எவ்வித கட்டணமும் இல்லாமல் ஜூன் 14 வரை ஆதாரை எளிதாகப் புதுப்பிக்கலாம்.
ஆஃப்லைன் மூலம் புதுப்பிப்புக்கு அதாவது ஆதார் மையத்திற்குச் சென்று நீங்கள் திருத்தங்களை மேற்கொண்டால், நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு திருத்தத்திற்கும் 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஓட்டுநர் உரிமத்தில் புதிய விதி
ஜூன் 1ம் தேதி முதல் போக்குவரத்து விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, ஜூன் 1ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓவிடம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றும் ஓட்டுனர் உரிமைத்தை பெற்றுக்கொள்ளலாம், புதிய விதியின்படி ஆர்டிஓவிடம் சென்று தேர்வு எழுதத் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் நிறுவனத்தில் இருந்தும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.
மைனர் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம் செலுத்த வேண்டும்
ஜூன் 1 முதல், 18 வயதுக்குட்பட்ட மைனர் வாகனம் ஓட்டினால் கடும் அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில் 18 வயதுக்குட்பட்ட நபர், வாகனம் ஓட்டி பிடிபட்டால், 25,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.